ஒருநாள் போட்டிகளில் இவரே உலகின் நம்பர் 1 ஓப்பனர் – இந்திய வீரரை புகழ்ந்த ஸ்ரீகாந்த்

Srikkanth
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் 1981 ஆம் ஆண்டு முதல் ஆயிரத்து 92 ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக 43 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 146 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். மேலும் இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு உள்ள இவர் தேர்வுக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2011 ஆம் ஆண்டு இந்தியா வெற்றிபெற்ற அணித்தேர்விலும் இவரின் பங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

SRIKKANTH

- Advertisement -

அதுமட்டுமின்றி தற்போது கிரிக்கெட் கமெண்டரி செய்துவரும் இவரது தமிழ் வர்ணனைக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு என்றால் அது மிகையல்ல. அந்த அளவிற்கு தனது விமர்சையான வர்ணனையின் மூலம் பல ரசிகர்களை பெற்றுள்ளார். இந்த கொரோனா பாதிப்பு நேரத்தில் ஏற்பட்டுள்ள இந்த ஓய்வு காரணமாக சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வரும் ரசிகர்களுக்கு பதிலளித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது ரசிகர்களின் ஒருவரின் கேள்விக்கு இந்திய அணியின் துவக்க வீரர் குறித்து பேசி ஸ்ரீகாந்த் கூறுகையில் : ரோகித் சர்மா எப்படி அடித்தாலும் மூக்கு மேல ராஜா மாதிரி என்கிற மாதிரி ரன்களை குவித்து கொண்டே இருக்கும் ஒரு அசாத்தியமான வீரர் என்று அவர் கூறியுள்ளார்.

Rohith

மேலும் ரோஹித்தை தான் உலக அளவில் சிறந்த துவக்க வீரராக பார்க்கிறேன். அவருக்கு சதங்கள் மற்றும் இரட்டை சதங்கள் விளாசும் அசாத்திய திறனுள்ளது மிகவும் ஆச்சரியம் என்று கூறியுள்ளார். ஒரு போட்டியில் நீங்க 150, 180, 200 ரன்களை அடிக்கும்போது டீம் ஸ்கோர் எங்கேயோ போய்விடும் அந்த வகையில் ரோகித் சர்மா சிறந்த துவக்க வீரர் என்பதற்கு எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை என ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்திய அணியின் துவக்க வீரர் ரோஹித் சர்மா ஏற்கனவே ஒரு நாள் போட்டிகளில் இதுவரை 29 சதங்களை பதிவு செய்துள்ளார். அதில் 11 முறை 140 ரன்களை கடந்து கடந்திருக்கிறார் மேலும் மூன்று முறை ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்துள்ள ரோஹித் 264 ரன்கள் என்ற இமாலய ரன் குவிப்பை தனிநபர் அதிகபட்சமாக வைத்துள்ளார்.

Rohith

அவரின் இந்த சாதனையை யாரும் நெருங்குவது என்பது அவ்வளவு எளிதல்ல இதுவரை இந்திய அணிக்காக 224 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் 9115 ரன்களை குவித்துள்ளார். அதுமட்டுமின்றி 32 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 2141 ரன்களை அவர் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement