இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை தாங்கள் விளையாடியுள்ள 13 ஆட்டங்களில் 3 வெற்றிகள் மற்றும் 10 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தினை பிடித்துள்ளது. இன்னும் சிஎஸ்கே அணிக்கு ஒரு போட்டி மட்டுமே எஞ்சியுள்ள வேளையில் அந்த போட்டியில் வெற்றியை பெற்றாலும் புள்ளி பட்டியல் கடைசி இடத்தை பிடித்து வெளியேற வேண்டிய நிலைமையிலேயே உள்ளது.
உண்மையை ஒத்துக்கிட்டு போங்க : கவாஸ்கர் விமர்சனம்
இதுவரை ஐந்து முறை கோப்பையை வென்ற சிஎஸ்கே அணி இதுபோன்ற ஒரு சரிவை பார்க்காத அளவிற்கு இந்த ஆண்டு வரலாறு காணாத சரிவை அந்த சந்தித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் சென்னை அணி மெகா ஏலத்தின் போது சரியான வீரர்களை தேர்வு செய்யாது என்று பலரும் பேசி வருகின்றனர். அதேபோன்று தற்போதைய அணியில் இடம்பெற்றுள்ள நட்சத்திர வீரர்களான தோனி, ஜடேஜா, அஸ்வின், துபே போன்ற முக்கிய வீரர்களின் செயல்பாடு மோசமாக அமைந்ததும் ஒரு காரணமாக பார்க்கப்பட்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக தோனி முன்பை போன்று தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்கிற பேச்சு தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததற்குப் பிறகு சென்னை அணியின் கேப்டன் தோனி குறித்து முன்னாள் இந்திய வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :
தோனி இப்படி தொடர்ந்து தவறு செய்வதை நிறுத்துங்கள். தற்போது உங்களால் சிறப்பாக விளையாட முடியவில்லை என்பதை ஒப்புக்கொண்டு அணியில் இருந்து வெளியேறுங்கள் இதுதான் சரியாக இருக்கும். தற்போது உங்களுக்கு வயதாகிவிட்டது இனியும் உங்களிடமிருந்து பெரியளவில் எதிர்பார்ப்பு என்பது தவறு. அதே வேளையில் வயது ஆகியும் தொடர்ந்து பேட்டிங்கிற்கு வந்து தவறு செய்வது என்பது சரியான விடயம் கிடையாது.
உங்களால் செய்ய முடியவில்லை என்றால் என்னால் முடியவில்லை என்று சொல்லிவிட்டு விலகிச் செல்வதுதான் நல்லது. அந்த முடிவை தான் நீங்கள் எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தொடர்ந்து விளையாடினால் நீங்கள் என்ன ரோலில் விளையாட வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். ஆனால் முன்பை போன்று பெரியளவில் பிரகாசிக்க முடியாமல் தவிக்கும் உங்களால் அணி பாதிக்கப்படுகிறது.
இதையும் படிங்க : சி.எஸ்.கே அணியை அடித்து நொறுக்கி அசத்தல் சாதனையை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி – விவரம் இதோ
அதே சமயம் முன்பை போல சென்னை அணியின் டாப் ஆர்டரும் சிறப்பாக விளையாடுவதில்லை. எனவே சிஎஸ்கே அணியில் விரைவில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும். முன்பெல்லாம் தோனி களத்திற்கு வந்தால் சுழற்பந்து வீச்சாளர்களை பெரிய பெரிய சிக்சர்களாக அடிப்பார். ஆனால் தற்போதயெல்லாம் பழைய ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருகிறார். இப்படி செய்வதனால் சென்னை அணிக்கு தான் பாதகம் என ஸ்ரீகாந்த் கூறியது குறிப்பிடத்தக்கது.



