இவர் பிறக்கும் போதே கேப்டனாக பிறந்தவர். அவரே இந்திய அணியின் சிறந்த கேப்டன் – ஸ்ரீகாந்த் புகழாரம்

Srikkanth
- Advertisement -

கொரோனா ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக தற்போது உலகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன. கிரிக்கெட் போட்டிகள் இல்லாததால் வீரர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருப்பதால் கிரிக்கெட் குறித்த பல்வேறு கருத்துக்களை சமூக வலை தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

SRIKKANTH

- Advertisement -

அந்த வகையில் முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது அனுபவங்கள் மற்றும் தங்களுக்கு பிடித்த வீரர்கள் குறித்த கருத்துக்களை அளித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரும், தமிழக வீரரான ஸ்ரீகாந்த் இந்திய அணியின் சிறந்த கேப்டன் யார் என்பது குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் கனெக்ட் நிகழ்ச்சிக்கு பேட்டியளித்த ஸ்ரீகாந்த் கூறியதாவது : இந்திய அணியில் சிறந்த கேப்டன் என்றால் அது எப்போதும் கங்குலி தான். அவர் அணியின் காம்பினேஷனை சரியாக பார்ம் செய்வதில் வல்லவர். 1976இல் கிளைவ் லாய்ட் எப்படி வெஸ்ட் இண்டீஸ் அணியை வெற்றிக்கான அணியாக பார்ம் செய்தாரோ அதே போல இந்திய அணியை நான் செய்தது கங்குலி தான்.

Ganguly

கங்குலி தலைமையில் இந்திய அணி வெளிநாடுகளில் வெற்றி பெற முடிந்தது. மேலும் கங்குலி ஒரு தனி திறமை வாய்ந்தவர். அவர் பிறவியிலேயே ஒரு கேப்டனாக பிறந்தவர் அதனால்தான் அவரால் இந்திய அணியை எளிமையாக தலைமை தாங்க முடிந்தது என்றும் அணியை வழி நடத்துவதில் அவருக்கு நிகர் யாரும் இல்லை என்றும் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

- Advertisement -

இந்திய அணியின் கேப்டனாக கங்குலி 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 21 வெற்றிகளையும். 146 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 76 வெற்றிகளையும் இந்திய அணிக்கு பெற்று தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தங்களின் தலைமையில்தான் இந்திய அணி 22 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது.

Ganguly

அதுமட்டுமின்றி கங்குலியின் தலைமையில்தான் பாகிஸ்தானிலும் இந்தியா முதன்முறையாக டெஸ்ட் தொடரை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் கேப்டனாக சாதித்த கங்குலி தற்போது பிசிசிஐயின் தலைவராக பொறுப்பேற்று இந்திய கிரிக்கெட் வாரியத்தை மிகச் சிறப்பாக வழி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement