தமிழ் புத்தாண்டில் கர்ஜனை அடித்தளம்.. தல தோனி முடிந்து போன பினிஷர் கிடையாது.. ஸ்ரீகாந்த், கைப் பாராட்டு

Srikkanth
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற்ற 30வது போட்டியில் லக்னோவை 5 விக்கெட் வித்தியாசத்தில் சாய்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ 167 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய சென்னைக்கு துவக்க வீரர்கள் சாய்க் ரசீத் 27, ரச்சின் 37 ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தைக் கொடுத்து பெவிலியன் திரும்பினர்.

ஆனால் மிடில் ஆர்டரில் ராகுல் திரிபாதி 9, ஜடேஜா 7, விஜய் சங்கர் 9 ரன்னில் அவுட்டாகி அழுத்தத்தை உண்டாக்கியதால் சென்னை மீண்டும் தோல்வியை சந்திக்குமோ என்று ரசிகர்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். அப்போது சிவம் துபே நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தி 43* (37) ரன்கள் குவித்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய தோனி 26* (11) ரன்கள் குவித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

முடிஞ்சு போகாத ஃபினிஷர்:

அதனால் 19.3 ஓவரில் இலக்கைத் தொட்ட சென்னை 5 தொடர் தோல்விகளை நிறுத்தி தங்களது 2வது வெற்றியைப் பெற்று நிம்மதியை பெருமூச்சு விட்டது. மறுபுறம் ரவி பிஸ்னோய் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் லக்னோ 3வது தோல்வியை சந்தித்தது. இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற தோனி தன் மீதான விமர்சனங்களுக்கும் கிண்டல்களுக்கும் பதிலடிக் கொடுத்தார்.

மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிக வயதில் ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர் என்ற சாதனையையும் தோனி படைத்தார். இந்தப் போட்டி பற்றி நிறைய முன்னாள் வீரர்கள் ட்விட்டரில் பாராட்டியுள்ளனர். அதில் “தோனி முடிந்து போன ஃபினிஷர் கிடையாது. படம் இன்னும் இருக்கிறது நண்பர்களே” என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

புத்தாண்டில் மறுமலர்ச்சி:

இர்பான் பதான் “சிஎஸ்கே இஸ் பேக். துபே, தோனி ஆகியோரிடம் இருந்து அபாரமான ஃபினிஷிங்” என்று பாராட்டியுள்ளார். ஏப்ரல் 14ஆம் தேதி 2025 தமிழ் புத்தாண்டு தினத்தில் சிஎஸ்கே மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் வெற்றியைப் பெற்றுள்ளதாக ஸ்ரீகாந்த் பாராட்டியுள்ளது பின்வருமாறு. “சென்னைக்கு என்ன ஒரு வெற்றி. மீண்டும் ஒருமுறை ஏன் தல என்று அழைக்கப்படுகிறார் என்பதை தோனி நிரூபித்துள்ளார்”

இதையும் படிங்க: சன் ரைசர்ஸ் அணியிலிருந்து காயம் காரணமாக முக்கிய வீரர் விலகல்.. 21 வயது மாற்றுவீரர் அறிவிப்பு – விவரம் இதோ

“அவரது செயல்பாட்டிற்காக மட்டுமல்ல. அவர் தனது அணியை அமைதியுடன் வழி நடத்திய கட்டளையான வழிக்காக. இது வெறும் வெற்றியல்ல. தொடர் தோல்விகளிலிருந்து உயிர்த்தெழுதலின் ஆரம்பம் போல் உணர்கிறேன். தமிழ் புத்தாண்டில் மீண்டும் கர்ஜனை” என்று கூறியுள்ளார். சுப்பிரமணியம் பத்ரிநாத் “இது தான் பழைய சென்னை கேப்டன் இன்னிங்ஸ். இது தான் எனக்குத் தெரிந்த தோனி” என்று பாராட்டியுள்ளார்.

Advertisement