கடந்த மார்ச் 22-ஆம் தேதி துவங்கிய 18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இந்த தொடரில் பேட் கம்மிஸ்ஸ் தலைமையில் பங்கேற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது மார்ச் 23-ஆம் தேதி நடைபெற்ற தங்களது முதல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தலாக இந்த தொடரை வெற்றியுடன் துவங்கியது.
சன் ரைசர்ஸ் அணியிலிருந்து வெளியேறிய நட்சத்திர வீரர் :
ஆனால் அதற்கடுத்து லக்னோ, டெல்லி, கொல்கத்தா மற்றும் குஜராத் என அடுத்தடுத்து நான்கு வரிசையான தோல்விகளை பெற்ற அந்த அணி முதல் ஐந்து போட்டிகளின் முடிவில் நான்கு தோல்விகளை பெற்று மோசமான பின்னடைவை சந்தித்தது. அதன் பின்னர் கடைசியாக ஏப்ரல் 12-ம் தேதி நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
இதன் மூலம் இந்த தொடரின் முதல் 6 போட்டிகளின் முடிவில் இரண்டு வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் தற்போது ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து அந்த அணியின் நட்சத்திர வீரரான ஆடம் ஜாம்பா காயம் காரணமாக வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக வெளியேறிய வேளையில் அவருக்கு பதிலாக ஆயுஷ் மாத்ரே என்கிற வீரரை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்திருந்தது. இந்நிலையில் காயம் காரணமாக தற்போது சன் ரைசர்ஸ் அணியிலிருந்து வெளியேறியுள்ள ஆடம் ஜாம்பாவிற்கு பதிலாக :
21 வயதான கர்நாடகாவை சேர்ந்த இடதுகை ஆட்டக்காரரான ரவிச்சந்திரன் ஸ்மரன் என்பவரை 30 லட்சம் என்கிற அடிப்படை விலைக்கு சன் ரைசர்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ரவிச்சந்திரன் ஸ்மரன் கர்நாடகா அணிக்காக இதுவரை 7 ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் விளையாடி 64 ரன்கள் சராசரியுடன் 500 ரன்கள் குவித்துள்ளார்.
இதையும் படிங்க : சி.எஸ்.கே அணி எங்களை ஸ்டெடி பண்ணவே விடல.. அதனால் தான் நாங்க தோத்தோம் – ரிஷப் பண்ட் வருத்தம்
அதில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஒரு இரட்டை சதமும் அடங்கும். அதே போன்று லிஸ்ட் ஏ போட்டியில் 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 72 ரன்கள் சராசரியுடனும் 2 சதங்களுடனும் 433 ரன்களை குவித்துள்ளார். அதேபோன்று 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 170 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 170 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



