சி.எஸ்.கே அணி எங்களை ஸ்டெடி பண்ணவே விடல.. அதனால் தான் நாங்க தோத்தோம் – ரிஷப் பண்ட் வருத்தம்

Rishabh Pant
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சொந்த மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 30-ஆவது லீக் ஆட்டத்தில் விளையாடிய ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியின் மூலம் தற்போது லக்னோ அணி 7 போட்டிகளில் 3 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்திற்கு சரிந்துள்ளது.

சி.எஸ்.கே அணிக்கெதிரான தோல்விக்கு இதுவே காரணம் : ரிஷப் பண்ட்

அதே வேளையில் இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இரண்டு வெற்றிகளுடன் கடைசி இடத்திலேயே நீடிக்கிறது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை குவித்தது.

- Advertisement -

பின்னர் 167 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து போட்டியின் முடிவில் பேசிய லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறுகையில் :

இந்த போட்டியில் நாங்கள் 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக அடித்து விட்டதாக நினைக்கிறேன். நாங்கள் எப்போதெல்லாம் இந்த போட்டியில் மொமென்டம் கிடைத்து ரன்களை குவிக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அப்போதெல்லாம் சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டை வீழ்த்தினார்கள். அதனால் எங்களால் ஒரு நிலையான பார்ட்னர்ஷிப்பை அமைக்க முடியவில்லை.

- Advertisement -

இந்த போட்டியில் பந்து நின்று வந்ததால் பேட்டிங் செய்ய கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது. இருப்பினும் 15 ரன்கள் வரை கூடுதலாக அடித்திருந்தால் நிச்சயம் இந்த போட்டியில் நாங்கள் இருந்திருக்க முடியும். ஆனால் கடைசிவரை எங்களால் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாமல் போனது. இந்த தொடரில் தற்போது மெல்ல மெல்ல என்னுடைய பேட்டிங் ஃபார்மை மீட்டெடுத்து வருகிறேன்.

இதையும் படிங்க : அதிரடியா அடிக்க தெரியாம இல்ல.. தோனி வந்து முடிச்சுட்டாரு.. லக்னோவை சாய்க்க இதான் என் திட்டம்.. துபே பேட்டி

அதேபோன்று பந்துவீச்சில் இந்த போட்டியின் போது எங்களது அணியின் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் பவர்பிளே ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்ததாலே பின்னடைவை சந்தித்தோம். இருந்தாலும் இந்த தோல்வியின் மூலம் கற்றுக் கொண்டுள்ள பாடங்களை வைத்து நிச்சயம் எதிர்வரும் போட்டிகளில் வலுவாக திரும்புவோம் என ரிஷப் பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement