அதிரடியா அடிக்க தெரியாம இல்ல.. தோனி வந்து முடிச்சுட்டாரு.. லக்னோவை சாய்க்க இதான் என் திட்டம்.. துபே பேட்டி

Shivam dube 2025
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 14ஆம் தேதி லக்னோவில் 30வது போட்டி நடைபெற்றது. அதில் லக்னோவை அதன் சொந்த மண்ணில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ அதிகபட்சமாக கேப்டன் ரிசப் பண்ட் 63, மிட்சேல் மார்ஷ் 30 ரன்கள் எடுத்த உதவியுடன் 167 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

சென்னைக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 2, பதிரனா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அடுத்ததாக விளையாடிய சென்னைக்கு துவக்க வீரர்கள் சாய்க் ரசித் 27, ரச்சின் ரவீந்திரா 37 ரன்கள் எடுத்து அசத்தினர். ஆனால் மிடில் ஆர்டரில் மீண்டும் ராகுல் திரிபாதி 9, ஜடேஜா 7, விஜய் சங்கர் 9 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர்.

- Advertisement -

துபே அசத்தல்:

அப்போது சிவம் துபே நிதானமாக விளையாடி 43* (37) ரன்கள் அடித்து நங்கூரமாக விளையாடினார். அவருடன் இணைந்த தோனி அதிரடியாக 26* (11) ரன்கள் அடித்ததால் 19.3 ஓவரில் இலக்கைத் தொட்ட சென்னை 5 தொடர் தோல்விகளை நிறுத்தி இரண்டாவது வெற்றியை பெற்றது. மறுபுறம் ரவி பிஸ்னோய் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் லக்னோ தங்களது 3வது தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் தம்மால் அதிரடியாக விளையாட முடியும் என்றாலும் சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் பேட்டிங் செய்து கடைசி வரை போட்டியை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற திட்டத்தைப் பயன்படுத்தியதாக துபே கூறியுள்ளார். அதே சமயம் முக்கிய நேரத்தில் வந்து தோனி அதிரடியாக விளையாடி வெற்றியை உறுதி செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி துபே பேசியது பின்வருமாறு.

- Advertisement -

தோனியின் உதவி:

“இந்த வெற்றி பெரியது. சிஎஸ்கே 5 தொடர்ச்சியான தோல்விகளை பெறக்கூடிய அணி கிடையாது. இன்று எங்களுடைய பவுலர்கள் நன்றாக பவுலிங் செய்தனர். இன்று நான் கடைசி வரை நின்று விளையாட வேண்டும் என்று விரும்பினேன். போட்டியை கடைசி வரை எடுத்துச் சென்று நாம் முடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். மிடில் ஆர்டரில் விக்கெட்டுகள் சில விக்கெட்டுகளை இழந்ததும் இதுவே அதற்கான நாள் என்று முடிவு செய்தேன்”

இதையும் படிங்க: முதல் விக்கெட் கீப்பராக ஐ.பி.எல் தொடரில் வரலாற்று சாதனையை நிகழ்த்திய தல தோனி – விவரம் இதோ

“இவை அனைத்தும் அட்டாக் செய்வதற்குப் பதிலாக சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் விளையாட வேண்டிய மனநிலைப் பற்றியதாகும். கடைசி வரை போட்டியை எடுத்துச் செல்வது சிறந்த ஆப்ஷன் என்று உணர்ந்தேன். தோனி வந்து பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டது எனது வேலையை எளிதாக்கியது. ஒவ்வொரு பந்தையும் கடினமாக அடிக்காமல் விளையாட வேண்டும் என்பதே எனது எளிமையான திட்டம். ஏனெனில் எதிரணி பவுலர்களும் நன்றாக பவுலிங் செய்தனர். இப்போட்டியிலிருந்து நிறைய நேர்மறையான விஷயங்களை அடுத்தப் போட்டிக்கு எடுத்துச் செல்வோம் என்பது முக்கியமானது” எனக் கூறினார்.

Advertisement