முதல் விக்கெட் கீப்பராக ஐ.பி.எல் தொடரில் வரலாற்று சாதனையை நிகழ்த்திய தல தோனி – விவரம் இதோ

MS Dhoni
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 30-வது லீக் போட்டியானது நேற்று லக்னோ நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார்.

முதல் விக்கெட் கீப்பராக தோனி நிகழ்த்திய சாதனை :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய லக்னோ அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை குவித்தது. லக்னோ அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் ரிஷப் பண்ட் 63 ரன்களையும், மிட்சல் மார்ஷ் 30 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 167 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக ஷிவம் துபே 43 ரன்களையும், ரச்சின் ரவீந்திரா 37 ரன்களையும் குவித்தனர்.

இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய மகேந்திர சிங் தோனி பேட்டிங்கில் 11 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 26 ரன்கள் குவித்ததோடு விக்கெட் கீப்பிங்கிலும் ஒரு ஸ்டம்பிங், ஒரு கேட்ச் மற்றும் ஒரு ரன் அவுட் என சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தவே அவருக்கு போட்டியின் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

- Advertisement -

இதன் மூலம் (43 வயதில்) அதிக வயதில் ஐபிஎல் போட்டிகளில் ஆட்டநாயகன் விருதை பெற்ற வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியதோடு சேர்த்து மேலும் ஒரு வரலாற்று மைல்கல் சாதனையை தோனி நிகழ்த்தியுள்ளார். அது குவித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : என்னை விட அசத்திய அந்த 2 பசங்களுக்கு கொடுக்காம.. எனக்கு ஏன் ஆட்டநாயகன் விருதை கொடுத்தீங்க.. தோனி பேட்டி

நேற்றைய போட்டியில் லக்னோ வீரர் ஆயுஷ் பதோனியை ஸ்டம்பிங் செய்ததன் மூலம் இந்த சாதனையை அவர் பதிவு செய்துள்ளார். மஹேந்திர சிங் தோனி இதுவரை ஐபிஎல் வரலாற்றில் 155 கேட்ச்கள் மற்றும் 46 ஸ்டம்பிங்கள் என 201 விக்கெட்டுகளை அவர் விக்கெட் கீப்பராக வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement