நேரலையில் கொந்தளித்த சீக்கா ஸ்ரீகாந்த் சார். முடிவை மாற்றிக்கொண்ட ஐ.சி.சி – ஒரு டீமையே காப்பாத்திட்டாரு

Srikanth
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கிட்டத்தட்ட சூப்பர் 12-தொடரின் இறுதி கட்டப் போட்டிகள் முடிவடைந்து அரையிறுதி சுற்று ஆரம்பிக்க உள்ள இந்தவேளையில் நேற்று ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முக்கியமான லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோற்கும் பட்சத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பைக்கு நேரடியாக பங்கேற்காது என்றும் தகுதிச்சுற்று அடிப்படையிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் என்று கூறப்பட்டது.

wivsaus

- Advertisement -

அதே வேளையில் நேற்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த போட்டியை தமிழில் வர்ணனை செய்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் வர்ணனையாளருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஐசிசி வெஸ்ட் இண்டீஸ் மீது எடுத்துள்ள இந்த நடவடிக்கை குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இரண்டு முறை உலக கோப்பையை வென்ற ஒரு சாம்பியன் அணியை எவ்வாறு தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாட அனுப்பலாம் ? இதில் என்ன விதிமுறை ? இருக்கிறது.

என்னை பொறுத்தவரை வெஸ்ட் இண்டீஸ் அணி நேரடியாக விளையாட தகுதி உள்ள ஒரு அணி. வெஸ்ட் இண்டீஸ் அணியில் உள்ள அனைவரும் சாம்பியன் பிளேயர்கள் என்று தனது ஆதரவினை ஏகபோகமாக ஆதரவினை வழங்கினார். மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணியை தகுதி சுற்று போட்டியில் விளையாட வைத்தால் தான் போராட்டம் நடத்துவேன் என்றும் நேரலையில் கொந்தளித்தார்.

wi

இந்நிலையில் அடுத்த சில நிமிடங்களிலேயே ஐசிசி வெளியிட்டிருந்த அறிக்கையில் : வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் ஏற்கனவே டி20 உலகக்கோப்பை சாம்பியன்ஷிப்பை கைப்பற்றியுள்ளதால் அவர்கள் தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாடாமல் நேரடியாக டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்பார்கள் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டது. இந்த ஆண்டு நடைபெற்ற தகுதி சுற்றுப் போட்டிகளில் விளையாடி பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, ஸ்காட்லாந்து, நமீபியா போன்ற அணிகள் முன்னேறி நிலையில் அடுத்த ஆண்டு சாம்பியன் நடப்புச் சாம்பியன் அணியான மேற்கிந்தியத் தீவுகளுக்கு இதே போன்று தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாட வேண்டிய நிலை வருமோ ? என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இதையும் படிங்க : ஹேப்பி பர்த் டே, மை லவ். தனது காதலியை அணைத்தபடி புகைப்படத்தை பகிர்ந்த கே.எல்.ராகுல் – இவர்தான் காதலியா ?

இவ்வேளையில் ஐசிசி இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கொந்தளித்த அடுத்த சில நிமிடங்களிலேயே ஐசிசி இந்த முடிவை அறிவித்துள்ளதால் தற்போது மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் நேரடியாக அடுத்த உலகக்கோப்பையில் பங்கேற்கலாம் என்பது உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement