ஹேப்பி பர்த் டே, மை லவ். தனது காதலியை அணைத்தபடி புகைப்படத்தை பகிர்ந்த கே.எல்.ராகுல் – இவர்தான் காதலியா ?

Rahul

இந்திய அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரரான கே.எல் ராகுல் கடந்த 2014ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணிக்காக அறிமுகமாகி 40 போட்டிகளில் 2321 குவித்துள்ளார். அதனை தொடர்ந்து 2016ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் அறிமுகமான இவர் இதுவரை 38 ஒருநாள் போட்டிகளிலும், 53 டி20 போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். கோலியின் சிஷ்யனாக பார்க்கப்படும் இவர் அடுத்த இந்திய அணியின் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

rahul

இந்த உலகக்கோப்பை தொடரிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கே எல் ராகுல் ஒரு ஸ்டைலிஷான வீரராக இந்திய அணியில் இருந்து வருகிறார். பொதுவாகவே இந்திய அணி வீரர்களுடன் காதலில் இருக்கும் நபர்கள் குறித்த விவரங்கள் வெளியானால் அது இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகும்.

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே இந்திய அணி வீரர்கள் பலர் தங்களது காதல் விவகாரங்களை வெளிப்படையாகவே பகிர்ந்துள்ளனர். அந்த வகையில் தற்போது ராகுல் தனது காதலியை அவரது பிறந்த நாளன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்தி பப்ளிக்காக ஒரு ஸ்டேட்மென்ட் விடுத்துள்ளார். அவர் காதலிக்கும் அந்த நபர் வேறு யாரும் இல்லை.

ஏற்கனவே அவருடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்ட அதியா ஷெட்டி தான். பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளான அதியா ஷெட்டி ஏற்கனவே ராகுலுடன் நெருங்கிய நட்பில் இருந்தவர். அதுமட்டுமின்றி கடந்த ஐபிஎல் தொடரின்போது ராகுலுடன் இணைந்து ஐக்கிய அரபு அமீரகம் பயணித்த அவர் அங்கேயே இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது ராகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் :

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உ.கோ தொடர் முடிவடைந்ததும் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்படவுள்ள 2 வீரர்கள் – விவரம் இதோ

அதியா ஷெட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த அவர் : “ஹாப்பி பர்த்டே மை லவ்” என்று அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்திற்கு இந்திய அணி வீரர்கள் பலரும் இந்திய அணி வீரர்களின் குடும்பத்தினரும் ரிப்ளை செய்து வருகின்றனர். இதன் மூலம் ராகுலின் காதலி அதியா தான் என்பது உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement