டி20 உ.கோ தொடர் முடிவடைந்ததும் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்படவுள்ள 2 வீரர்கள் – விவரம் இதோ

Williamson
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் டி20 உலக கோப்பையில் இந்திய அணியானது பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே படு மோசமான தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக தற்போது அரையிறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறுவது கேள்விக்குறியாகி உள்ள நிலையில் இந்த தொடர் முடிந்ததும் பிசிசிஐ தேர்வுக்குழுவினர் சில முக்கிய முடிவுகளை நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் எடுக்க இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ashwin

- Advertisement -

வரும் நவம்பர் 17-ஆம் தேதி துவங்க இருக்கும் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுவது மட்டுமின்றி சில வீரர்கள் நீக்கப்பட உள்ளனர். அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்காக தயாராகும் வகையில் இந்த மாற்றங்கள் செய்யப்படும் என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கிடைத்துள்ள தகவலின் பேரில் ஆல்ரவுண்டர் ஹர்டிக் பண்டியா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே பந்து வீசாமல் இருந்து வரும் பாண்டியா அணியில் இருந்து வெளியேற்றப்படுவார் என்று தெரிகிறது. அதேபோன்று பந்துவீச்சில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் புவனேஷ்வர் குமார் அணியில் இருந்து நீக்கப்படுவார் என்று தெரிகிறது.

pandya

அவர்களை தொடர்ந்து பும்ரா மற்றும் ஷமி ஆகியோருக்கு ஓய்வு அவசியம் என்பதால் அவர்களும் இந்த தொடரில் இடம் பெறமாட்டார்கள் என்று கூறப்படுகிறது. எனவே நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் மீண்டும் சாஹல் அணியில் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக பந்து வீசிய ஆவேஷ் கானுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : 3 வருஷமா உசுர கொடுத்து ஆடியிருக்கோம். பொசுக்குன்னு இப்படியெல்லாம் சொல்லாதீங்க – ஜடேஜா வேதனை

அதேபோன்று ஹார்டிக் பாண்டியாவுக்கு பதிலாக வெங்கடேஷ் ஐயர் அணியில் இணைவார் என்று கூறப்படுகிறது. மேலும் புவனேஷ்வர்குமாருக்கு பதிலாக உம்ரான் மாலிக்கும் நியூசிலாந்து தொடரில் இடம் பெற அதிகமான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement