வீடியோ : பாகிஸ்தான் வீரரையே தமிழில் பேச வைத்த மூக்குமேல ராஜா சீக்கா – இவரு கலாட்டாவுக்கு அளவே இல்ல

Srikanth
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் சூப்பர் 12 சுற்று ஆட்டங்களின் முடிவில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளும், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. அதன்படி நடைபெற்ற முடிந்த முதலாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான அணி இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.

அதனை தொடர்ந்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று அடிலெயிடு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு இரண்டாவது அணியாக முன்னேறியுள்ளது.

- Advertisement -

அதனை தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி வரும் 13-ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நிறைவடைந்த பின்னர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலுக்காக மைதானத்திலிருந்து முன்னாள் இந்திய வீரரும், தமிழக வீரருமான ஸ்ரீகாந்த் இன்டர்வியூ செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மைதானத்தில் நடந்து சென்ற பாகிஸ்தான் அணியின் துணை கேப்டனான ஷதாப் கானை அழைத்து அவரிடம் சில கேள்விகளை எழுப்பினார். எப்பொழுதுமே இந்த டி20 உலக கோப்பை தொடரில் போட்டி முடிந்ததும் மைதானத்தில் பேட்டி எடுக்கும் ஸ்ரீகாந்த் அப்போது வீரர்களை நேரலையில் பேச வைத்து கலகலப்பை உண்டாக்கி வருகிறார்.

- Advertisement -

அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் வீரரையும் அழைத்து தமிழில் அவர் பேச வைத்தது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் ஷதாப் கானை அழைத்த ஸ்ரீகாந்த் அவரிடம் சில கேள்விகளை கேட்டுவிட்டு பின்னர் கடைசியாக தமிழில் செம வின் என்று கூறுமாறு ஷதாப் கானிடம் கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க : வீடியோ : எங்களுடன் பைனலில் மோதும் அறுகதை உங்களுக்கு இல்லை – தோல்விக்குப்பின் இந்தியா பற்றி சோயப் அக்தர் பேசியது என்ன

அதனை ஏற்ற ஷதாப் கானும் செம வின் என்று கூறுகிறார். இப்படி பாகிஸ்தான் வீரரையே தமிழில் பேச வைத்த ஸ்ரீகாந்த்தின் இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement