பாகிஸ்தானை விட்டு வெளியே போகணும் ப்ளீஸ் விட்ருங்க.. கெஞ்சிய இலங்கை வீரர்களை அடிபணிய வைத்த வாரியம்

PAK vs SL
- Advertisement -

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அங்கு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற பாகிஸ்தான் 1 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி 14ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள பைஸ்லாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் அத்தொடரிலிருந்து பாதியிலேயே விலகி நாடு திரும்ப அனுமதி கொடுக்குமாறு நிறைய இலங்கை வீரர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். அதாவது சில தினங்களுக்கு முன் பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் நகரில் கார் வாயிலாக நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் இயற்கை எய்தினர். அத்துடன் 27க்கும் மேற்பட்ட நபர்கள் பலத்த காயமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

ப்ளீஸ் விட்ருங்க:

எனவே பாகிஸ்தானில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சூழ்நிலை நிலவுகிறது. அதனால் பாகிஸ்தானில் இருந்து உடனடியாக வெளியேறி சொந்த நாட்டுக்கு செல்ல விரும்புவதாக இலங்கை வீரர்கள் தெரிவித்துள்ளார்கள். குறிப்பாக 2008ஆம் ஆண்டு இதே இலங்கை அணியினர் பாகிஸ்தானில் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை மறக்க முடியாது.

அது போன்ற சூழ்நிலை மீண்டும் வரக்கூடாது என்பதால் தங்களை பாகிஸ்தானில் இருந்து வெளியேற அனுமதி கொடுக்குமாறு இலங்கை வீரர்கள் தங்கள் நாட்டு வாரியத்திடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத இலங்கை வாரியம் பாகிஸ்தானில் தங்கள் அணிக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. எனவே அனுமதியின்றி பாகிஸ்தானை விட்டு வெளியேறும் வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை வாரியம் எச்சரித்துள்ளது.

- Advertisement -

அடிபணிய வைத்த இலங்கை வாரியம்:

அதையும் தாண்டி வீரர்கள் வெளியேறினால் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்புவோம் என்றும் இலங்கை வாரியம் தெரிவித்துள்ளது. அத்துடன் பாகிஸ்தான் அரசு இலங்கை வீரர்களுக்கு முழுமையான பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று உறுதி செய்துள்ளதாக இலங்கை வாரியம் தெரிவித்துள்ளது. அதனால் திட்டமிட்டபடி பாகிஸ்தானுக்கு எதிராக எஞ்சிய 2 போட்டிகளில் இலங்கை அணி விளையாடும் என்று அந்நாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: அவசரப்பட்டு ஆசைய வளக்காதீங்க.. ரோஹித் இன்னும் ஃகன்பார்ம் பண்ணல.. மும்பை செலக்டர் அறிவிப்பு

இதிலிருந்து ப்ளீஸ் பாகிஸ்தானில் இருந்து வெளியேற எங்களுக்கு அனுமதி கொடுங்க என்று இலங்கை வீரர்கள் கேட்டது தெளிவாகத் தெரிகிறது. மறுபுறம் வெளியேறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லி இலங்கை வாரியம் அவர்களை அடிபணிய வைத்துள்ளது தெரிகிறது. இது இலங்கை மற்றும் பாகிஸ்தான் ரசிகர்களிடம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

Advertisement