3வது டி20யில் தோற்க இதான் காரணம்.. ஒன்டே சீரிஸ்ல பசங்க பதிலடி கொடுப்பாங்க.. இலங்கை கேப்டன் நம்பிக்கை

Asalanga 3
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இலங்கை விளையாடியது. ஆனால் அந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த இலங்கை 3வது போட்டியிலும் சூப்பர் ஓவரில் வீழ்ந்தது. ஜூலை 30ஆம் தேதி பல்லக்கேல் நகரில் நடைபெற்ற கடைசி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 137/9 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக கில் 39, ரியான் பராக் 26, வாஷிங்டன் சுந்தர் 25 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கை சார்பில் அதிகபட்சமாக தீச்சனா 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 138 ரன்களை துரத்திய இலங்கையும் 20 ஓவரில் 137/8 ரன்கள் எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது. அதிகபட்சமாக நிசாங்கா 16, குஷால் மெண்டிஸ் 43, குசால் பெரேரா 46 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

ஒன்டே சீரிஸ்ல அசத்துவோம்:
இந்தியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் சூரியகுமார், ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதன் பின் நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் வாஷிங்டன் சுந்தர் சுழலில் இலங்கை 2 விக்கெட்டுகளை இழந்து 2 ரன் மட்டுமே எடுத்தது. இறுதியில் தீக்சனா வீசிய சூப்பர் ஓவரில் 3 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு சூரியகுமார் பவுண்டரி அடித்து வெற்றி பெற வைத்தார்.

அதனால் ஏற்கனவே முதல் 2 போட்டிகளிலும் வென்ற இந்தியா 3 – 0 (3) என்ற கணக்கில் இலங்கையை அதன் சொந்த மண்ணில் ஒய்ட்வாஷ் செய்து கோப்பையை வென்றது. இந்நிலையில் முதல் 2 போட்டிகளைப் போலவே இப்போட்டியிலும் கடைசிக்கட்ட ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்து தோல்வியை கொடுத்ததாக இலங்கை கேப்டன் அசலங்கா வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

தவறான ஷாட் செலக்சன் தோல்வியை கொடுத்ததாக தெரிவிக்கும் அவர் ஒருநாள் தொடரில் இன்னும் சிறப்பாக பேட்டிங் செய்து இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “மிடில் ஆர்டர் மற்றும் லோயர் மிடில் ஆர்டரில் எங்களுடைய பேட்டிங் மிகப்பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது. மோசமான ஷாட் செலக்சன் தோல்விக்கு காரணமானது. ஸ்பின்னர்கள் நன்றாக வீசியதாலயே ஹஸரங்கா மேலே பேட்டிங் வந்தார். அவருக்கு ஓரிரு பவுண்டரிகளை அடிப்பதற்கான லைசன்ஸ் நாங்கள் கொடுத்துள்ளோம். ஆனால் அது வேலை செய்யவில்லை”

இதையும் படிங்க: என்னோட கடைசி ஓவரை விட அது தான் இந்தியாவின் வெற்றிக்கு காரணம்.. இலங்கையை வீழ்த்திய சூரியகுமார் பேட்டி

“இந்த பிட்ச்சில் பந்து பழையதாகும் போது ஷாட் செலக்சன் நன்றாக இருக்க வேண்டும். ஆனால் இந்த பிட்ச்சில் பேட்டிங் செய்வது மிகவும் கடினம். இந்த இலக்கு எட்டக்கூடியது என்பதால் எங்களால் சாக்கு சொல்ல முடியாது. இதை விட நாங்கள் நன்றாக செயல்பட வேண்டும்.வே அடுத்து நடைபெறும் ஒருநாள் தொடரில் பேட்டிங்கில் இன்னும் சிறந்த செயல்பாடுகளை பார்க்க விரும்புகிறேன். எங்களுடைய பையன்கள் ஒருநாள் தொடரில் இன்னும் சிறப்பாக விளையாடுவார்கள் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.

Advertisement