7 வருடம் கழித்து.. 8க்கு 8.. பாலை குடித்து விட்டு இலங்கையை பாம்பாக கொத்திய வங்கதேசம்.. சாதனை வெற்றி

Sl vs ban 2
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று செப்டம்பர் 20ஆம் தேதி துவங்கியது. அபுதாபியில் நடைபெற்ற முதல் சூப்பர் 4 போட்டியில் இலங்கை – வங்கதேசம் மோதியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை 20 ஓவரில் போராடி 168/8 வருடங்கள் குவித்தது.

இலங்கை அணிக்கு நிசாங்கா 22, குஷால் மெண்டிஸ் 34 ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தனர். இருப்பினும் கமில் மிஸ்ரா 5, குசால் பெரேரா 16 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். ஆனால் லோயர் ஆர்டரில் அசத்திய முன்னாள் கேப்டன் சனாகா அதிரடியாக விளையாடி 3 பவுண்டரி 6 சிக்ஸருடன் 64* (37) ரன்கள் விளாசி அசத்தினார்.

- Advertisement -

வங்கதேசம் வெற்றி:

அவருடன் இந்நாள் கேப்டன் அசலங்கா 21 (12) ரன்கள் எடுத்து கை கொடுத்த நிலையில் வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக முஸ்தஃபிசூர் ரஹ்மான் 3, மெஹதி ஹசன் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்ததாக விளையாடிய வங்கதேசத்துக்கு டன்சிட் ஹசன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் சாய்ப் ஹசன் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார்.

எதிர்புறம் வந்த கேப்டன் லிட்டன் தாஸ் 23 (16) ரன்னில் பெவிலியன் திரும்பினார். மறுபுறம் அரை சதத்தை அடித்து அசத்திய ஹசன் 61 (45) ரன்கள் குவித்து முக்கிய நேரத்தில் பெவிலியன் திரும்பினார். ஆனால் மிடில் ஆர்டரில் தவ்ஹீத் ஃஹிரிடாய் அதிரடியாக விளையாடி 58 (37) ரன்கள் விளாசி வங்கதேசத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்து அவுட்டானார்.

- Advertisement -

பாம்பாக கொத்திய வங்கதேசம்:

கடைசியில் ஜாகிர் அலி 9 (4), மெஹதி ஹசன் 0 ரன்களில் அவுட்டானாலும் சமீம் ஹொசைன் 14* (12) நசும் அஹ்மத் 1* (1) ரன்கள் எடுத்தனர். அதனால் 19.5 ஓவரில் 169/6 ரன்கள் எடுத்த வங்கதேசம் 4 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. அதனால் 7 வருடங்கள் கழித்து ஆசிய கோப்பையில் இலங்கை அணியை வங்கதேசம் தோற்கடித்து சாதனை படைத்தது. அந்த வெற்றியால் மைதானத்தில் இருந்த வங்கதேச ரசிகர்கள் இலங்கை ரசிகர்களிடம் பாம்பு நடனத்தை ஆடி கடுப்பேற்றி கொண்டாடினர்.

இதையும் படிங்க: 50 பந்தில் 100.. கிங் கோலியின் சாதனையை தூளாக்கிய மந்தனா.. ஆஸியை நொறுக்கி உலக சாதனை

இத்தனைக்கும் கடந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்த இலங்கை அணி வங்கதேசம் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற மிகப்பெரிய உதவியை செய்தது. அதை அடுத்தப் போட்டியிலேயே மறந்த வங்கதேச ரசிகர்கள் பாலைக் குடித்து விட்டு இலங்கையை பாம்பாக கொத்தியது போல் கொண்டாடினர். அதற்கிடையே ஆசிய டி20 கோப்பை தொடரில் கடைசியாக விளையாடிய 8 போட்டிகளிலும் வெற்றிகளைப் பெற்று வந்த இலங்கையின் வெற்றி நடை இப்போட்டியில் முடிந்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக சனாகா, ஹசரங்கா தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

Advertisement