இமாலய இலக்கினை செட் செய்த சன் ரைசர்ஸ். வெற்றி பெறுமா கொல்கத்தா ?

Kkr
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் இரண்டாவது போட்டி இன்று 24 தேதி துவங்கியது. சற்றுமுன் 3.30 மணிக்கு இவ்விரு அணிகளுக்கும் இடையே டாஸ் போடப்பட்டது. இந்த டாசில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தார்.

Bhuvi

- Advertisement -

அதன்படி முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி 20 முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 181 ரன்களை குவித்தது. அந்த அணி சார்பில் வார்னர் அதிரடியாக ஆடி 53 பந்துகளில் 85 ரன்களை குவித்தார். மேலும், தமிழக வீரரான விஜய் ஷங்கர் 24 பந்துகளில் 40 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.

தற்போது வரை கொல்கத்தா அணி 4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 30 ரன்களை குவித்துள்ளது. 11 பந்துகளில் 7 ரன்களை சந்தித்த க்றிஸ் லின் சாகிப் பந்துவீச்சில் ரஷித் கானிடம் கேட்சாகி வெளியேறினார். இன்னும் வெற்றிக்கு 152 ரன்கள் தேவை என்ற நிலையில் கொல்கத்தா அணி தொடர்ந்து ஆடிவருகிறது.

Bairstow

கொல்கத்தா அணியில் கார்த்திக், ரஸ்ஸல் மற்றும் கில் போன்ற வீரர்கள் இருப்பதால் அந்த அணி இலக்கினை அடையும் என்றே எதிர்பார்க்கலாம். இருந்தும் ஆட்டம் முடிந்த பின்பே முழு நிலவரம் தெரியும்.

Advertisement