- Advertisement -
ஐ.பி.எல்

சன் ரைசர்ஸ் அணியிலிருந்து வெளியேற்றப்பட இருக்கும் நட்சத்திர வீரர்.. மினி ஏலத்தில் நடக்கவுள்ள போட்டி – விவரம் இதோ

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது டிசம்பர் இரண்டாம் வாரம் நடைபெற உள்ளது. இந்த மினி ஏலத்தில் பங்கேற்கும் பத்து அணிகளும் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் தங்களது அணியிலிருந்து வெளியேற்றப்படும் வீரர்களையும், தக்க வைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலையும் வெளியிட வேண்டும் என்று ஏற்கனவே ஐபிஎல் நிர்வாகம் கெடு விதித்திருந்தது.

சன் ரைசர்ஸ் அணியிலிருந்து வெளியேற்றப்பட இருக்கும் நட்சத்திர வீரர் :

இதன் காரணமாக தற்போது அனைத்து அணிகளும் இந்த மினி ஏலத்தில் கலந்து கொள்வதற்காக தயாராகி வருகின்றன. இந்நிலையில் இந்த மினி ஏலத்திற்கு முன்பாக அனைத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து பெரிய தொகையில் இருக்கும் வீரர்களை வெளியேற்றவிட்டு பின்னர் மீண்டும் ஏலத்தின் போது அவர்களை சற்று குறைந்த தொகைக்கு வாங்க முயற்சிகளை நடத்தி வருகின்றன.

- Advertisement -

அந்த வகையில் தற்போது சன் ரைசர்ஸ் அணியும் தங்களது அணியிலிருந்து ஒரு நட்சத்திர வீரரை வெளியேற்ற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் கடந்த மெகா ஏலத்தின் போது சன் ரைசர்ஸ் அணிக்காக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக வாங்கப்பட்ட ஹென்றிச் கிளாசன் அந்த அணியிலேயே அதிக விலைக்கு 23 கோடி என்கிற தொகைக்கு வாங்கப்பட்டிருந்தார்.

நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் தொடரில் 13 ஆட்டங்களில் விளையாடிய அவர் 172 ஸ்ட்ரைக் ரேட் உடன் 487 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். மிகச் சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி இருந்தாலும் 23 கோடி என்பது பெரிய தொகை என்பதனால் அவரை வெளியேற்றிவிட்டு மினி ஏலத்தில் பங்கேற்கும் அவரை மீண்டும் சற்று குறைந்த தொகைக்கு ஏலத்தில் எடுக்க விரும்புவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

ஆனால் ஒருவேளை அப்படி அவர் மினி ஏலத்திற்கு வரும்போது அவரை ஏலத்தில் எடுக்க பல்வேறு அணிகளும் போட்டி போட காத்திருக்கின்றன. எனவே அவர் மினி ஏலத்திற்கு வந்தாலும் நிச்சயம் ஒரு பெரிய தொகையை நோக்கி செல்வார் என்று தெரிகிறது. அதிலும் குறிப்பாக குறைந்தது 15 கோடி ரூபாய் வரை அவர் மினி ஏலத்தில் செல்ல வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பிரசித் கிருஷ்ணாவுக்கு கிடைத்த ஏமாற்றம்.. அவருக்கு பதிலாக இடம்பிடித்த ஆகாஷ் தீப் – விவரம் இதோ

கடந்த 2018-ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளில் அறிமுகமான ஹென்றிச் கிளாஸன் இதுவரை 49 போட்டிகளில் விளையாடி 2 சதம் மற்றும் 7 அரைசதம் என 1480 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற வேளையில் வெளிநாடுகளில் நடக்கும் டி20 லீக்குகளில் மட்டுமே விளையாட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -