இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது வரும் நவம்பர் 14-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்கவுள்ளது. இந்த தொடரானது துவங்க இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ள வேளையில் இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று பிசிசிஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக இடம்பிடித்த ஆகாஷ் தீப் :
அப்படி வெளியான இந்திய டெஸ்ட் அணியில் இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் துணை கேப்டனாக ரிஷப் பண்ட் அணிக்கு திரும்பியுள்ளார். இந்திய ஏ அணியின் கேப்டனாக இருந்து தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் முழு உடற்தகுதியோடும், நல்ல பார்மோடு அணிக்கு திரும்பியுள்ளார்.
அதோடு இன்னும் சில நட்சத்திர வீரர்களும் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளனர். கடைசியாக நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய பெரும்பாலான வீரர்கள் மீண்டும் இந்த டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளனர். அதேவேளையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடியிருந்த பிரசித் கிருஷ்ணாவிற்கு இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் மறுக்கப்பட்டுள்ளது.
அவருக்கு பதிலாக ஆகாஷ் தீப் மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பி உள்ளார். கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரின் போது காயம் காரணமாக அணியில் இடம்பெறாத அவர் தற்போது காயத்திலிருந்து மீண்டும் முழு உடற்தகுதியை எட்டியுள்ளதால் இந்திய டெஸ்ட் அணிக்கு ஆகாஷ் தீப் கம்பேக் கொடுத்துள்ளார்.
அதேவேளையில் பிரசித் கிருஷ்ணா இந்திய அணியிலிருந்து வெளியேற்றப்பட்டு இருந்தாலும் தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய ஏ அணியில் இடம் பிடித்துள்ளார்.
இதையும் படிங்க : கருண் நாயரின் கரியரையும் முடித்துவைத்த அஜித் அகார்கர்.. இனி சேன்ஸ் கிடைப்பது கஷ்டம் தான் – விவரம் இதோ
இங்கிலாந்து தொடர் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடர் என இரண்டு தொடர்களிலுமே ஓரளவு சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய பிரசித் கிருஷ்ணாவிற்கு இந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது ஏமாற்றத்தை அளித்தாலும் இந்திய ஏ அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேவேளையில் டெஸ்ட் அணியில் தொடர்ந்து அசத்தி வரும் ஆகாஷ் தீப்பிற்கு இந்த வாய்ப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



