286 ரன்ஸ்.. ராஜஸ்தானை அடித்து நொறுக்கி ஓடவிட்ட ஹைதராபாத் சரவெடி சாதனை.. ஆர்ச்சர் மோசமான சாதனை

SRH vs RR 2
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 23ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு ஹைதராபாத் நகரில் மூன்றாவது போட்டியில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத்துக்கு ஆரம்பத்திலேயே அதிரடி காட்டிய அபிஷேக் ஷர்மா 24 (11) ரன்னில் அவுட்டானார்.

அவருடன் சேர்ந்து விளையாடிய டிராவிஸ் ஹெட் தம்முடைய ஸ்டைலில் ராஜஸ்தான் பவுலர்களை அடித்து நொறுக்கினார். அவருடன் ஜோடி சேர்ந்த இசான் கிசான் தம்முடைய பங்கிற்கு வேகமாக ரன்கள் குவித்தார். அந்த வகையில் இரண்டாவது விக்கெட்டுக்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் ஹெட் 9 பவுண்டரி 3 சிக்ஸருடன் அரை சதத்தை அடித்து 67 (31) ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

ஹைதெராபாத் சரவெடி:

அதே போல மறுபுறம் அசத்திய இசான் கிசான் அரை சதத்தை விளாசினார். அதற்கடுத்ததாக வந்த நித்திஷ் ரெட்டி தம்முடைய பங்கிற்கு மூன்றாவது விக்கெட்டுக்கு 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 30 (15) ரன்கள் விளாசி பெவிலியன் திரும்பினார். அவருக்கு அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் ஹென்றிச் க்ளாஸென் தம்முடைய பங்கிற்கு ராஜஸ்தானை சூறையாடி 5 பவுண்டரி ஒரு சிக்சருடன் 34 (14) ரன்னில் அவுட்டானார்.

ஆனால் இந்த பக்கம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இசான் கிசான் சதத்தை அடித்து 11 பவுண்டரி 6 சிக்ஸருடன் 106* (47) ரன்கள் விளாசி சூப்பர் ஃபினிசிங் கொடுத்தார். இந்தியா மற்றும் மும்பை அணியிலிருந்து கழற்றி விடப்பட்டுள்ள அவர் ஹைதராபாத் அணியில் கம்பேக் கொடுத்துள்ளார். அதனால் 20 ஓவரில் ஹைதராபாத் 286-6 ரன்களை அடித்து நொறுக்கியது. இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக ஹைதராபாத் சரவெடியான வரலாற்றுச் சாதனையும் படைத்தது.

- Advertisement -

பரிதாப ஆர்ச்சர்:

இதற்கு முன் 2024இல் மும்பைக்கு எதிராக இதே ஹைதராபாத் 277-3 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனை. 2024இல் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் அடித்த ஹைதராபாத் அதே பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. எனவே அந்த சாதனையை இன்று ஹைதராபாத் 2 ரன்னில் தவற விட்டுள்ளது. மறுபுறம் ராஜஸ்தான் அணிக்கு அதிகபட்சமாக துஷார் தேஷ்பாண்டே 3, தீக்சனா 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

இதையும் படிங்க: 105க்கு ஆல் அவுட்.. 115 ரன்ஸ்.. ஆக்லாந்துக்கு வெளியே ஓடாத பாக் பரிதாப தோல்வி.. நியூஸிலாந்து மெகா வெற்றி

அதை விட நம்பிக்கை நட்சத்திரம் ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவரில் விக்கெட் எடுக்காமல் 76 ரன்கள் வாரி வழங்கினார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் வழங்கிய பவுலர் என்ற மோசமான பரிதாப சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த வருடம் டெல்லிக்கு எதிராக குஜராத்துக்காக விளையாடிய மோகித் சர்மா 73 ரன்கள் கொடுத்ததே முந்தைய சாதனை.

Advertisement