190 ரன்ஸ்.. லார்ட் இஸ் பேக்.. காட்டடி ஹைதெராபாத்தை கட்டுப்படுத்திய லக்னோ.. தாக்கூர் சாதனையுடன் மாஸ் கம்பேக்

SRH vs LSG 2
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 27ஆம் தேதி ஹைதராபாத் நகரில் 7வது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற லக்னோ அணி பௌலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு அபிஷேக் சர்மாவை 6 ரன்னில் அவுட்டாக்கிய சர்துள் தாகூர் அடுத்ததாக வந்த இஷான் கிசானை கோல்டன் டக் அவுட்டாக்கி மிரட்டினார்

அதனால் 15-2 என ஆரம்பத்திலேயே ஹைதராபாத் திணறிய நிலையில் மறுபுறம் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி சவாலை கொடுத்தார். அப்போது அவரை 47 (28) ரன்னில் பிரின்ஸ் யாதவ் போல்டாக்கி அசத்தினார். அதே போல மறுபுறம் நங்கூரமாக விளையாட முயற்சித்த நித்திஷ் ரெட்டியை 32 (28) ரன்னில் ரவி பிஸ்னோய் போல்ட்டாக்கினார்.

- Advertisement -

அடக்கிய லக்னோ:

அவர்களைத் தொடர்ந்து மிடில் ஆர்டரில் தம்முடைய ஸ்டைலில் அடித்து நொறுக்க முயற்சித்த ஹென்றிச் க்ளாசன் 26 (17) ரன்களில் ரன் அவுட்டானார். அவருடன் சேர்ந்து விளையாடிய அன்கீட் வர்மா 5 சிக்சர்களை பறக்க விட்டு 36 (13) ரன்னில் பெவிலியன் திரும்பினார். அதற்கு அடுத்ததாக வந்த கேப்டன் பட் கமின்ஸ் 18 (4) ரன்கள் விளாசி அவுட்டானார்.

இறுதியில் ஹர்ஷித் ராணா 12* (11) ரன்கள் எடுத்தப் போதிலும் யாருமே அதிரடியாக விளையாடி ஃபினிஷிங் செய்யவில்லை. அதனால் 20 ஓவரில் ஹைதராபாத் அணி 190-9 ரன்கள் மட்டுமே எடுத்தது. பொதுவாகவே காட்டுத்தனமாக அடித்து நொறுக்கக் கூடிய ஹைதராபாத் கடந்தப் போட்டியில் 286 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. அதனால் இந்தப் போட்டியில் 300 ரன்கள் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணியை சிறப்பாக பவுலிங் செய்த லக்னோ 200 ரன்களை கூட தொடவிடாமல் கட்டுப்படுத்தி அசத்தியது.

- Advertisement -

லார்ட் தாகூர் இஸ் பேக்:

அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய அந்த அணிக்கு சர்துள் தாகூர் 4 ஓவரில் 34 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் தனது சிறந்த பந்து வீச்சை (4/34) பதிவு செய்து அவர் சொந்த சாதனை படைத்தார். இதற்கு முன் 2022இல் பஞ்சாப்புக்கு எதிராக 4/32 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனை.

இதையும் படிங்க: விருதில் கூடவா அவங்களுக்கு வஞ்சகம் செய்வீங்க.. பால் போடலன்னா என்ன பண்ணுவீங்க.. அஸ்வின் நியாயமான கேள்வி

அத்துடன் 2 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் இந்த வருடம் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இத்தனைக்கும் இந்த வருடம் ஏலத்தில் ஆரம்பத்தில் விலை போகாத தாக்கூர் காயமடைந்த வீரருக்கு பதிலாக லக்னோ அணிக்குள் வந்தார். அந்த வாய்ப்பில் ஊதா தொப்பியை வாங்கியுள்ள அவர் லார்ட் என்பதை நிரூபிக்க துவங்கியுள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டுகின்றனர்.

Advertisement