விருதில் கூடவா அவங்களுக்கு வஞ்சகம் செய்வீங்க.. பால் போடலன்னா என்ன பண்ணுவீங்க.. அஸ்வின் நியாயமான கேள்வி

R Ashwin
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. அந்தத் தொடரில் வழக்கம் போல பவுலர்களை அடித்து நொறுக்கும் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவித்து ரசிகர்களுக்கு பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விருந்தாக படைத்து வருகிறார்கள். அதனால் இம்முறையும் பவுலர்களின் நிலைமை கொஞ்சம் பரிதாபமாகவே இருக்கிறது என்று சொல்லலாம்.

முன்னதாக ஐபிஎல் தொடரில் பெரும்பாலான போட்டிகளில் ஃபிளாட்டான பிட்ச்கள், சிறிய பவுண்டரிகள், நோபால் போட்டால் ஃபிரீ ஹிட் உட்பட நிறைய விஷயங்கள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்து வருகிறது. அதனால் ஐபிஎல் தொடரில் பேட்டிங், பௌலிங் ஆகிய இரண்டுக்கும் சமமான நிலை இல்லையென்று ராபடா போன்ற பவுலர்கள் விமர்சித்து வருகிறார்கள். அந்த சூழ்நிலையில் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் ஆட்டநாயகன் மட்டுமின்றி பல்வேறு விருதுகள் வழங்கப்படுகின்றன.

- Advertisement -

விருதிலும் வஞ்சகம்:

இருப்பினும் அதில் பெரும்பாலான விருதுகளை பேட்ஸ்மேன்களே பெறுகிறார்கள். எடுத்துக்காட்டாக அதிக சிக்சர்கள், அதிக பவுண்டரிகள், அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட பேட்ஸ்மேன்களுக்கு ஸ்பெஷல் விருது வழங்கப்படுகிறது. ஆனால் அதே போல சிறப்பாக பவுலிங் செய்தார், சிறந்த பந்தை வீசினார் என்பது போன்ற விருதுகள் பவுலர்களுக்கு இல்லை என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் விருது வழங்குவதில் கூட பவுலர்களுக்கு வஞ்சகம் நடப்பதாக அஸ்வின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். எனவே பவுலர்கள் நாங்கள் பவுலிங் செய்யப்போவதில்லை என்று பந்தை எடுத்துக்கொண்டு செல்லப் போகும் நாள் வரும் என்றும் அஸ்வின் கலகலப்பாக தெரிவித்துள்ளார். இது பற்றி தன்னுடைய இந்தி யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

அஸ்வின் கிண்டல் விமர்சனம்:

“ஐபிஎல் விருது வழங்கும் நிகழ்வில் குறைந்தது 10 விருதுகள் கொடுக்கப்படுகிறது. அதில் 50% விருதுகளை இரு அணிகளும் பெறுகிறார்கள். ஆனால் யாராவது நன்றாக பவுலிங் செய்தால் அல்லது நல்ல ஓவரை போட்டால் அதற்கு விருதுகள் வழங்கப்படுவதில்லை. சூப்பர் ஸ்ட்ரைக்கர், சூப்பர் ஃபோர்ஸ், சூப்பர் சிக்ஸ் போன்ற பேட்ஸ்மேன்களுக்கான விருதுகள் அங்கே இருக்கின்றன”

இதையும் படிங்க: இப்படியும் ஒருத்தர் வேணும்.. சிஎஸ்கே தாண்டி ஆர்சிபி கோப்பையை வெல்லுமா? பத்ரிநாத் கேள்விக்கு ராயுடு பதில்

“ஆனால் சூப்பர் பால் என்ற விருது அங்கே இல்லை. ஒருமுறை வேகமாக வீசப்பட்ட பந்துக்கு விருது கொடுக்கப்பட்டது. ஆனால் அந்தப் பந்தில் சிக்ஸர் அடித்த பேட்ஸ்மேனுக்கும் விருது வழங்கப்பட்டது. எனவே பவுலர் மைதானத்திலிருந்து பந்தை எடுத்துக்கொண்டு வெளியே ஓடும் காலம் தூரத்தில் இல்லை. பவுலர்கள் பந்தை வீசாவிட்டால் நீங்கள் எப்படி அடிக்க முடியும்?” என்று கலாய்த்தார்.

Advertisement