இப்படியும் ஒருத்தர் வேணும்.. சிஎஸ்கே தாண்டி ஆர்சிபி கோப்பையை வெல்லுமா? பத்ரிநாத் கேள்விக்கு ராயுடு பதில்

CSK vs RCB
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் மார்ச் 28ஆம் தேதி 8வது லீக் போட்டி நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. சென்னையும் மும்பையும் தங்களது முதல் போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளைத் தோற்கடித்து இத்தொடரை வெற்றிகரமாக துவக்கியுள்ளன.

எனவே அந்தப் போட்டியில் வென்று இரண்டாவது வெற்றியை பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. அதில் 17 வருடங்களாக ஒரு கோப்பையைக் கூட வெல்ல முடியாமல் தடுமாறி வரும் பெங்களூரு எதிரணிகளால் கடுமையாக கிண்டலடிக்கப்பட்டு வருகிறது. அதனால் இம்முறை புதிய கேப்டன் ரஜத் படிதார் முதல் கோப்பையை வென்று அந்தக் கிண்டலை உடைக்கும் லட்சியத்துடன் பெங்களூரு விளையாடி வருகிறது.

- Advertisement -

கோப்பை வெல்லுமா:

இந்நிலையில் சென்னை அணிக்காக விளையாடிய முன்னாள் வீரர்கள் சுப்பிரமணியம் பத்ரிநாத் மற்றும் அம்பாதி ராயுடு ஆகியோர் யூடியூப் பக்கத்தில் உரையாடினார்கள். அதில் இம்முறை பெங்களூரு அணி கிண்டல்களை உடைத்து முதல் கோப்பையை வென்று சாதனை படைக்குமா என்று பத்ரிநாத் கேட்டார். அப்படி கேட்டதுமே அந்த இருவருவே கட்டுப்படுத்த முடியாமல் சிரிப்பை பகிர்ந்து கொண்டனர்.

பின்னர் ஒரு ரசிகனாக ஆர்சிபி கோப்பையை வெல்ல விரும்புவதாக ராயுடு தெரிவித்தார். ஆனால் இந்த வருடம் தோனிக்காக சிஎஸ்கே கோப்பையை வெல்ல வேண்டும் என்று அவர் கூறினார். அதே சமயம் கிண்டலடிப்பதற்காகவே ஐபிஎல் தொடரில் ஆர்சிபி போன்ற அணி இருக்க வேண்டும் என்றும் ராயுடு கலகலப்பாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ராயுடு கிண்டல் பதில்:

இது பற்றி ராயுடு பேசியது பின்வருமாறு. “முற்றிலும் ஒரு ரசிகன் என்ற அடிப்படையிலும் பல ஆண்டுகளாக ஆர்சிபி அணி தங்களுக்குத் தாங்களே செய்யும் செயல்களால் அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்த ஒருவன் என்ற அடிப்படையிலும் அவர்கள் எப்போதாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் ஒருவேளை அது இந்த வருடமாக இருக்கக்கூடாது”

இதையும் படிங்க: இந்திய ஏ அணியுடன் நீங்களும் போங்க.. ரோஹித் மற்றும் கோலிக்கு பி.சி.சி.ஐ போட்டுள்ள கட்டளை – என்ன நடந்தது?

“இந்த வருடம் சிஎஸ்கே சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறோம். எப்படிப் பார்த்தாலும் நாளின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கு ஆர்சிபி போன்ற ஒரு அணி தேவை” என்று கூறினார். கடந்த வருடம் சிஎஸ்கே அணியை கடைசிப் போட்டியில் தோற்கடித்த பெங்களூரு பிளே ஆஃப் சுற்றுக்குச் சென்றதை கோப்பையை வென்றது போல் கொண்டாடியது. அப்போதும் ராயுடு இதே போல ஆர்சிபி அணியை கலாய்க்கும் வகையில் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement