- Advertisement -
ஐ.பி.எல்

200 ரன்கள் அடிப்பதில் தாங்கள் தான் கிங் என்பதை நிரூபித்து சன் ரைசர்ஸ் அணி – நிகழ்த்திய சாதனை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 67-வது லீக் போட்டியில் விளையாடியிருந்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 55 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்.சி.பி அணியை வீழ்த்தியது. என்னதான் இந்த போட்டியில் சன் ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றிருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் அவர்கள் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தையும், ஆர்.சி.பி அணி முதலிடத்தையும் பிடித்தன.

சன் ரைசர்ஸ் அணி நிகழ்த்திய சாதனை :

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்களை குவித்தது. இந்த போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பாக அதிகபட்சமாக இஷான் கிஷன் 79 ரன்களையும், அபிஷேக் ஷர்மா 56 ரன்களையும், கிளாசன் 51 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 256 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்தது. இதன் காரணமாக சன் ரைசர்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது பெங்களூரு அணி சார்பாக அதிகபட்சமாக பட்டிதார் 56 ரன்களையும், வெங்கடேஷ் ஐயர் 44 ரன்களையும் குவித்தனர்.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் அடித்த 255 ரன்கள் மூலம் சன் ரைசர்ஸ் அணியானது 2026 ஐ.பி.எல் தொடரில் ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. அந்த வகையில் சன் ரைசர்ஸ் அணி நிகழ்த்திய சாதனை யாதெனில் : இதுவரை ஐ.பி.எல் போட்டிகளில் ஒரு சீசனில் அதிகமுறை 200 ரன்கள் அடித்த அணிகளாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்.சி.பி ஆகிய அணிகள் தலா எட்டு முறை அடித்து முதல் இடத்தில் இருந்தன.

- Advertisement -

இதையும் படிங்க : முகமது ஷமியின் மோசமான ஐ.பி.எல் சாதனையை சமன் செய்த புவனேஷ்வர் குமார் – விவரம் இதோ

இவ்வேளையில் நேற்றைய போட்டியில் 255 ரன்கள் அடித்ததன் மூலம் நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரில் 9 முறை 200 பிளஸ் ரன்களை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அடித்துள்ளது. இதன்மூலம் ஒரு சீசனில் அதிக முறை 200 ரன்களை அடித்த அணியாக சன் ரைசர்ஸ் அணி சாதனை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -