முகமது ஷமியின் மோசமான ஐ.பி.எல் சாதனையை சமன் செய்த புவனேஷ்வர் குமார் – விவரம் இதோ

Bhuvi and Shami
- Advertisement -

ஹைதராபாத் நகரில் நேற்று நடைபெற்ற நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 67-வது லீக் போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர் பெங்களூரு ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சன் ரைசர்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்.சி.பி அணியை வீழ்த்தியது.

முகமது ஷமியின் மோசமான சாதனையை சமன் செய்த புவனேஷ்வர் குமார் :

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் குவித்தது. பின்னர் 256 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய ஆர்.சி.பி அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக சன் ரைசர்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது முதலில் பந்துவீசிய ஆர்.சி.பி அணி சார்பாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமார் 4 ஓவர்கள் பந்துவீசி விக்கெட் எதுவும் எடுக்காமல் 51 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முகமது ஷமியின் மோசமான சாதனையை அவர் சமன் செய்துள்ளார் .அந்த வகையில் புவனேஸ்வர் குமார் நிகழ்த்திய சாதனை யாதெனில் :

ஐபிஎல் போட்டிகளில் 4 ஓவர்கள் பந்துவீசி அதிக முறை 50 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்த இந்திய பந்து வீச்சாளராக முகமது ஷமி முதலிடத்தில் இருந்தார். இதுவரை ஐ.பி.எல் போட்டிகளில் அவர் 9 முறை ஒரு போட்டியில் 50 ரன்களுக்கு மேல் கொடுத்துள்ளார். அந்த மோசமான சாதனையை நேற்று நடைபெற்ற போட்டியில் புவனேஸ்வர் குமார் சமன் செய்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : 211 ஆவது முறை.. டி20 போட்டிகளில் புதிய உச்சம் தொட்ட விராட் கோலி – அசத்தல் சாதனை

நேற்றைய போட்டியில் அவர் 4 ஓவர்களில் 51 ரன்கள் விட்டுக் கொடுத்த வேளையில் ஒன்பதாவது முறையாக இந்த மோசமான சாதனையை நிகழ்த்தி முகமது ஷமியுடன் இணைந்துள்ளார். இவர்களுக்கு அடுத்து முகமது சிராஜ் எட்டு முறை 50-க்கும் மேற்பட்ட ரன்களை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement