211 ஆவது முறை.. டி20 போட்டிகளில் புதிய உச்சம் தொட்ட விராட் கோலி – அசத்தல் சாதனை

Virat Kohli
- Advertisement -

ஹைதராபாத் நகரில் நேற்று நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 67-வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்து 255 ரன்கள் குவிக்க அடுத்ததாக விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 256 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்தி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்தது.

விராட் கோலி நிகழ்த்திய அசத்தல் சாதனை :

இதன் காரணமாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சார்பாக துவக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி 11 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரியுடன் 15 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இருந்தாலும் துவக்க வீரரான வெங்கடேஷ் ஐயருடன் இணைந்து 4.3 ஓவர்களில் 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து டி20 போட்டிகளில் ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் விராட் கோலி நேற்றைய போட்டியில் நிகழ்த்திய சாதனை யாதெனில் :

டி20 போட்டிகளை பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக 50+ பார்ட்னர்ஷிப்பை அதிகமுறை அமைத்த வீரராக இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் முதலிடத்தில் இருந்தார். டி20 போட்டிகளில் அலெக்ஸ் ஹேல்ஸ் மட்டும் 210 முறை மற்ற வீரர்களுடன் 50+ ரன்களை குவித்து பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : அதிவேக இந்திய வீரராக ஷிவம் துபேவின் சாதனையை முறியடித்த ரஜத் பட்டிதார் – விவரம் இதோ

இவ்வேளையில் நேற்று வெங்கடேஷ் ஐயருடன் இணைந்து 50+ பார்ட்னர்ஷிப் அமைத்த விராட் கோலி ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் 211 முறை 50+ பாட்னர்ஷிப் அமைத்து அவரை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் டேவிட் வார்னர் 200 முறையும், பாபர் அசாம் 196 முறையும், கிறிஸ் கெயில் 191 முறையும் 50+ பார்ட்னர்ஷிப் அமைத்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement