- Advertisement -
ஐ.பி.எல்

போன வருஷம் 85 ரன்கள் மட்டுமே அடித்தாலும் இந்த வருஷம் 10.75 கோடிக்கு ஏலம் போன வீரர் – அதிர்ஷ்டம் தான்

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில் அதில் பங்கேற்ற 590 வீரர்களிலிருந்து 204 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களை தேர்வு செய்வதற்காக இந்த ஏலத்தில் பங்கேற்ற அனைத்து 10 அணிகளும் ரூபாய் 551 கோடிகளை செலவு செய்துள்ளன. இதில் அதிக விலைக்கு ஏலம் போன வீரராக இந்தியாவின் இளம் விக்கெட் கீப்பர் இஷன் கிஷன் 15.25 கோடிகளுக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகி சாதனை படைத்துள்ளார்.

அவரைப்போலவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 14 கோடிக்கு ஒப்பந்தமான இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹர் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனை படைத்தார்.

- Advertisement -

வெளிநாட்டு சரக்கு:
பொதுவாகவே ஐபிஎல் ஏலத்தில் வெளிநாட்டு வீரர்களை கடும் போட்டி போட்டு பெரிய தொகைக்கு வாங்குவதற்கு எந்த அணியும் எப்போதுமே யோசிப்பது கிடையாது. அந்த வகையில் இந்த வருடம் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் லியம் லிவிங்ஸ்டன் 11.50 கோடிகளுக்கு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகி சாதனை படைத்தார். அவருக்கு அடுத்தபடியாக இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் வணிந்து ஹசரங்கா 10.75 கோடிகளுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஏலத்தில் மற்ற வெளிநாடுகளை விட இந்த முறை வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து அதிகப்படியான வீரர்கள் வாங்கப்பட்டுள்ளார்கள். அந்த வகையில் இந்த ஏலத்தில் 10.75 கோடிகள் என்ற மிகப்பெரிய தொகைக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட நிக்கோலஸ் பூரன் இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

- Advertisement -

நிக்கோலஸ் பூரான்:
மெகா சிக்ஸர்களை பறக்க விடும் வல்லமை பெற்ற நிக்கோலஸ் பூரனை இந்த ஏலத்தில் வாங்குவதற்கு கொல்கத்தா, சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகளிடையே மிகப்பெரிய போட்டி நிலவியது. இறுதியில் ஹைதராபாத் அணி நிர்வாகம் அவரை வெற்றிகரமாக வாங்கியது. இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ள நிக்கோலஸ் பூரன் தனது நண்பர்களுக்கு டிரீட் வைத்துள்ளார்.

ஐபிஎல் ஏலத்தின் போது இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்பதற்காக கொல்கத்தா நகரில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த அவர் 10.75 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு ஒப்பந்தமான மகிழ்ச்சியில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் உள்ள தனது நண்பர்களுக்கு பீட்சா டிரீட் வைத்துள்ளார். ரூபாய் 15,000 மதிப்புள்ள 15 பீட்சாக்களை ஆர்டர் செய்த அவர் தனது நண்பர்களுக்கு விருந்து அளித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

பிசா பார்டி ட்ரீட்:
இது பற்றி அந்த ஹோட்டல் மேனேஜர் பேசியது பின்வருமாறு. “வெளி உணவு அனுமதிக்கப்படாததால் அவர் 15 பீட்சாக்களுக்கு ஹோட்டல் சமையல்காரரிடம் ஆர்டர் செய்தார். இது ஒரு தகுதி வாய்ந்த சமையல்காரரால் செய்யப்பட்டது. கட்டுப்பாடுகள் காரணமாக உணவின் வெப்பநிலை மற்றும் அது எவ்வாறு சுத்திகரிக்கப்படுகிறது என்பதைக் கூற வேண்டும். அதன் பிறகு மட்டுமே அது அவர்களின் அறைக்கு சென்றது. அதில் மொத்தம் 15 பீஸ்ஸா பெட்டிகள் இருந்தன. மேலும் அறைக்கு வழங்கப்படுவதற்கு முன்பு அவை அனைத்தும் சுத்தப்படுத்தப்பட்டன. அதற்கான பணத்தை அவர்கள் செலுத்தினார்கள்” என கூறினார்.

நிக்கோலஸ் பூரான் இப்படி பார்ட்டி கொடுத்ததற்கு மிக முக்கியமான காரணம் உள்ளது. அது என்னவெனில் கடந்த ஐபிஎல் 2021 தொடரில் 12 போட்டிகளில் விளையாடிய அவர் வெறும் 85 ரன்கள் மட்டுமே எடுத்தார். குறிப்பாக அதில் 4 டக் அவுட்டான அவர் ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையும் படைத்தார். அதன் காரணமாக இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் அவர் அடிப்படை விலைக்கு கூட போக மாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 10.75 கோடிக்கு ஒப்பந்தமானது நிச்சயம் கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாகும்.

ஐபிஎல் மட்டுமல்லாது சமீப காலங்களாக மோசமான பார்ம்மில் இருந்து வரும் நிக்கோலஸ் பூரன் தற்போது ஐபிஎல் ஏலத்தில் பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளதால் புத்துணர்ச்சி அடைந்துள்ளார். இதன் காரணமாக இந்தியாவுக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் 43 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 மெகா சிக்ஸர்கள் உட்பட அரைசதம் அடித்து 61 ரன்கள் குவித்து அவர் நல்ல பார்முக்கு திரும்பியுள்ளார் என்பது ஹைதராபாத் ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

- Advertisement -
Published by