சி.எஸ்.கே வைக்காத நம்பிக்கையை நடராஜன் மீது வைத்து ஏலத்தில் எடுத்த அணி – எவ்வளவு தொகை தெரியுமா?

Nattu-2
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் மெகா அளவில் பெங்களூருவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த வருடம் சென்னை, மும்பை உள்ளிட்ட ஏற்கனவே இருந்த பழைய 8 அணிகளுடன் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய புதிய 2 அணிகளும் சேர்ந்து இந்த ஏலத்தில் பங்கேற்ற 590 வீரர்களை வாங்க பலப்பரீட்சை நடத்தின.

hugh

- Advertisement -

இறுதியில் 551 கோடி ரூபாய் செலவில் 204 வீரர்களை அனைத்து 10 அணிகளும் கடுமையான போட்டிக்கு பின் வாங்கி உள்ளன. இந்த ஏலத்தில் அதிகபட்சமாக இந்தியாவின் இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிசான் 15.25 கோடிகளுக்கு ஒப்பந்தமாகி சாதனை படைத்துள்ளார்.

தமிழகத்தின் நடராஜன்:
அதேபோல் இந்த ஏலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக் போன்ற மூத்த வீரர்களும் வாசிங்டன் சுந்தர், ஷாருக்காண், சாய் கிஷோர் போன்ற இளம் வீரர்களும் மிகப்பெரிய தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்டது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதே போல தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர இடது கை வேகப்பந்து வீச்சாளர் தங்கராசு நடராஜன் இந்த ஏலத்தில் அடிப்படை விலையான 1 கோடி ரூபாய் பிரிவின் கீழ் பங்கேற்றார்.

natarajan

தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடர் மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணிக்காக கடந்த பல வருடங்களாகவே அபாரமாக செயல்பட்டு வந்த இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல்முறையாக காலடி எடுத்து வைத்தார். அந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த அவருக்கு முழுமையான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் கிடைத்த வாய்ப்புகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்தார்.

- Advertisement -

யார்கர் கிங் நட்டு:
இதன் கரணமக 2018ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட அவர் 2019 வரை ஒரு போட்டியில் கூட வாய்ப்பளிக்கப்படவில்லை. அந்த வேளையில் 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியின் நட்சத்திர வீரர் புவனேஷ்வர் குமார் காயம் அடைந்ததால் கிடைத்த பொன்னான வாய்ப்பை கன கச்சிதமாக பயன்படுத்திய நடராஜன் அந்த சீசனில் 16 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

nattu

குறிப்பாக பேட்ஸ்மேன்கள் சிக்ஸர்களை பறக்க விடக்கூடிய கடைசி கட்ட ஓவர்களில் 6 பந்துகளையும் மிகத்துல்லியமான யார்க்கர் பந்துகளாக வீசும் அவரின் திறைமையை பார்த்த அனைவரும் வாயைப் பிளந்தார்கள் என்றே கூறலாம். இதனால் தமிழ்நாட்டின் “யார்கர் கிங்” என அழைக்கப்பட்ட நடராஜன் அந்த வருடத்தின் இறுதியில் நிகழ்ந்த ஆஸ்திரேலியாவின் இந்திய சுற்றுப் பயணத்தில் நெட் பந்துவீச்சாளராக இடம் பிடித்திருந்தார். இருப்பினும் அந்த தொடரில் ஒரு சில முக்கிய வீரர்கள் காயம் அடைந்ததால் இந்திய அணிக்காக விளையாடும் பொன்னான வாய்ப்பும் அவரைத் தேடி வந்தது.

- Advertisement -

தமிழகத்தின் தங்கம்:
கிடைத்த வாய்ப்பை மிக இறுக்கமாக பற்றிக் கொண்ட நடராஜன் முதல் முறையாக அனுபவமில்லாத ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடிய போதிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். அந்த சுற்றுப்பயணத்தில் முதலில் வாய்ப்பு கிடைத்த டி20 தொடரில் அசத்திய காரணத்தால் ஒருநாள் தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதிலும் சிற்ப்பாக காரணத்தால் அதன் பின் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் காபா மைதானத்தில் நடந்த 4வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்ற நடராஜன் அதிலும் அபாரமாக செயல்பட்டு இந்தியாவின் சரித்திர வெற்றியில் பங்காற்றினார்.

மொத்தத்தில் தமிழ்நாட்டின் சேலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து படிப்படியாக முன்னேறி 3 வகையான இந்திய கிரிக்கெட்டிலும் விளையாடி இந்தியாவுக்கே பெருமை சேர்த்த நடராஜனை தமிழகத்தின் தங்கம் என தமிழக ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கினார்கள். அந்த சமயத்தில் ஐபிஎல் 2021 தொடர் துவங்குவதற்கு முன்பாக காயத்தால் துரதிர்ஷ்டவசமாக விலகிய அவர் அதன்பின் அதிலிருந்து குணமடைந்து கடந்த வருடம் இறுதியில் சயீத் முஸ்தாக் அலி கோப்பை உள்ளூர் தொடரில் மிக மிகச் சிறப்பாக செயல்பட்டு தற்போது விரைவில் துவங்க உள்ள ரஞ்சி கோப்பைக்கான தமிழக அணியில் விளையாட தேர்வாகியுள்ளார்.

4 கோடிகளில் நட்டு:
இந்த வேளையில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் இவ்வளவு திறமைகள் நிறைந்த நடராஜனை மீண்டும் தங்கள் அணிக்காக விளையாட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் ஆரம்பத்திலேயே விரும்பியது. ஆனால் அவரின் திறமையை தெரிந்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் ஹைதராபாத் அணிக்கு போட்டியாக நடராஜனை ஏலத்தில் கேட்டது. நேரம் செல்ல செல்ல இவரை வாங்குவதற்கு இரு அணிகளும் இடையே கடும் போட்டி நிலவியதால் அவரின் ஏலத்தொகை 2 கோடி, 3 கோடி என படிப்படியாய் அடிப்படை தொகையை விட 3 மடங்கு உயர்ந்தது.

nattu 1

ஆனாலும் விடாத பிடியாய் கடைசி வரை நின்று ஏலம் கேட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நடராஜனை ரூபாய் 4 கோடிகள் என்ற மிகப்பெரிய தொகைக்கு வெற்றிகரமாக ஒப்பந்தம் செய்தது. பொதுவாகவே இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உலக கிரிக்கெட் அரங்கில் மவுசு அதிகமாகும். அந்த வகையில் தமிழகம் கண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க மகத்தான இடது கை வேகப்பந்து வீச்சாளரான நடராஜனை மீண்டும் ஹைதராபாத் வாங்கியதால் அந்த அணி நிர்வாகம் மகிழ்ச்சி அடைந்துள்ளது. இருந்தபோதிலும் இவ்வளவு திறமைகள் நிறைந்த அவரை வாங்குவதற்கு தமிழ்நாட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இந்த ஆண்டும் முயற்சி கூட செய்யாதது தமிழக ரசிகர்களை கோபமடையச் செய்தது.

Advertisement