இவங்க ரெண்டு பேர் அவுட்டான சன் ரைசர்ஸ் டீமே அவ்ளோதான் – ரொம்ப பாவம் அவங்க

Bairstow
- Advertisement -

ஐபிஎல் 14வது சீசனின் 9வது லீக் மேட்ச், நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஹைதராபாத் அணியும் மும்பை அணியும் மோதின. இப்போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது ஹைதராபாத் அணி. நேற்றைய போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் விருத்திமான் சாஹாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்ட காரணத்தால், டேவிட் வார்னருடன் ஓபனிங் இறங்கினார் ஜானி பேர்ஸ்டோ.

pollard

- Advertisement -

இருவரும் அந்த அணிக்கு பவர் பிளே ஓவர்களிலே அதாவது முதல் 6 ஓவர்களிலேயே 60க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து வலுவான தொடக்கத்தை தந்தாலும் மிகப்பெரிய தவறுகளை செய்து தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். ஒரு கட்டத்தில் எளிதாக ஜெயிக்கவேண்டிய இடத்தில் இருந்து இந்த போட்டியில் தோல்வியடைய இந்த 2 விக்கெட்டுகளும் காரணமாக அமைந்தது.

அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த இந்த இருவரின் விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தனர் மும்பை இந்தியன்ஸ் அணி பௌலர்கள். ஆனால் க்ருணால் பாண்டியா வீசிய 7வது ஓவரின் இரண்டாவது பந்தில், ஸ்லாக் ஸ்வீப் ஷாட் ஆடச் சென்று ஹிட் விக்கெட் ஆனார் ஜானி பேர்ஸ்டோ.

Bairstow

நல்ல ரன் ரேட்டில் அணி சென்றுகொண்டிருக்கும்போது தேவையில்லாத ஷாட் ஆடி தனது விக்கெட்டை மும்பை அணிக்கு தாரை வார்த்தார் பேர்ஸ்டோ. அதேபோல் ஆட்டத்தின் 11வது ஓவரின் 3வது பந்தில் ரன் அவுட்டாகி வெளியேறினார் அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர். ஏற்கனவே அந்த ஓவரில் ஒரு பவுண்டரி வந்த நிலையில் அந்த ரன் அவுட் தேவையில்லாத ஒன்றாக அமைந்தது.

warner

மேலும் ஹைதராபாத் அணி ஏற்கனவே மிடில் ஆர்டரில் கேன் வில்லியம்சன் இல்லாததால் சொதப்பி வருகிறது, இந்நிலையில் எளிதாக வெற்றிபெற வேண்டிய இப்போட்டியில் நல்ல தொடக்கத்தை அமைத்த டேவிட் வார்னரும், ஜானி பேர்ஸ்டோவும் தேவையே இல்லாமல் அவுட்டானது அந்த அணி ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement