IPL 2023 : சன் ரைசர்ஸ் அணிக்கு வெளிநாட்டு வீரரை கேப்டனாக அறிவித்த நிர்வாகம் – கப்புக்கு பிளான் பண்ணிட்டாங்க

Natarajan Nattu SRH
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டிற்கான பதினாறாவது ஐபிஎல் தொடரானது இன்னும் சில வாரங்களில் இந்தியாவில் துவங்க உள்ளது. இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளும் தங்களது வீரர்களை உறுதி செய்து பயிற்சியை துவங்க இருக்கும் வேளையில் சன்ரைசர்ஸ் அணியின் புதிய கேப்டன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே அந்த அணியின் கேப்டனாக செயல்பட்ட கேன் வில்லியம்சன் கடந்த சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது மட்டுமின்றி அணியிலிருந்தே வெளியேற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்கான சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக யார் செயல்பட போகிறார்கள் என்பது குறித்த பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமார் புதிய கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் சன்ரைசர்ஸ் அணி இன்று தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரரான எய்டன் மார்க்ரமை சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக அதிகாரவபூர்வமாக நியமித்துள்ளது.

இப்படி இவர் கேப்டனாக அறிவிக்கப்பட காரணம் யாதெனில் : இந்த ஆண்டு முதல் முறையாக தென் ஆப்பிரிக்கா மண்ணில் நடைபெற்ற RSA டி20 லீக் தொடரில் சன்ரைசஸ் அணி நிர்வாகத்தின் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியே அறிமுகத்தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது.

- Advertisement -

அந்த அணிக்கு எய்டன் மார்க்ரம் தலைமை தாங்கி வழிநடத்தியதோடு அந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக மூன்றாவது இடத்தையும் பிடித்திருந்தார். இப்படி அறிமுக தொடரிலேயே சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு கோப்பையை வென்று தந்த அவரது இந்த திறனை உணர்ந்த சன்ரைசர்ஸ் நிர்வாகம் ஐபிஎல் தொடரிலும் அவரையே கேப்டனாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : ஐபிஎல் தொடரில் விளையாடவில்லைனா உலகம் அழிஞ்சுடுமா? பும்ராவை விளாசும் முன்னாள் இந்திய வீரர்

இப்படி அறிமுக சீசனிலேயே கேப்டனாக அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி கோப்பையை பெற்று தந்த எய்டன் மார்க்ரம் நிச்சயம் சன்ரைசர்ஸ் அணிக்காக ஐபிஎல் கோப்பையையும் பெற்று தருவார் என்பதே அவர்களது எதிர்பார்ப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement