ஐபிஎல் தொடரில் விளையாடவில்லைனா உலகம் அழிஞ்சுடுமா? பும்ராவை விளாசும் முன்னாள் இந்திய வீரர்

Jasprith Bumrah vs KKR
- Advertisement -

நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா இந்தியாவுக்கு எப்போது விளையாடுவார் என்பது சில ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தாலும் விளையாட வர வேண்டாம் என்பதே தற்போதைக்கு பெரும்பாலான ரசிகர்களின் கோபமாக இருக்கிறது. ஏனெனில் ஐபிஎல் தொடரில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி கடந்த 2016ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணியில் அறிமுகமான அவர் தன்னுடைய வித்தியாசமான பவுலிங் ஆக்சனை வைத்து 2018 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். குறிப்பாக போட்டியின் எந்த தருணத்திலும் யார்கர் போன்ற பந்துகளை பிரயோகித்து விக்கெட்டை எடுத்து வெற்றியை இந்தியாவின் பக்கம் திருப்பக்கூடிய கருப்பு குதிரையாக உருவெடுத்த அவர் கடந்த 2022 ஜூலை மாதம் நிகழ்ந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் காயமடைந்தார்.

Bumrah

- Advertisement -

அது ஆசியக் கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்த நிலையில் காயத்திலிருந்து குணமடைந்து அக்டோபர் மாதம் ஒரு சில போட்டிகளில் விளையாடிய அவர் மீண்டும் முதுகு புறத்தில் காயத்தை சந்தித்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பைக்கு முன்பாக வெளியேறினார். அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை மேற்கொண்டு வழக்கம் போல பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று பயிற்சிகளை மேற்கொண்ட அவர் முழுமையாக குணமடைந்து விட்டதால் கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் விளையாடுவார் என்று பிசிசிஐ அறிவித்தது.

உலகம் அழிஞ்சுடுமா:
ஆனால் அவசரமாக களமிறங்கி மீண்டும் காயமடைந்து விடக்கூடாது என்பதற்காக அத்தொடரிலிருந்து பும்ரா விலகுவதாக அடுத்த நாளே அறிவித்த பிசிசிஐ அவர் முழுமையாக குணமடைவதற்கு போதிய நேரம் கொடுக்கப்படும் என்று தெரிவித்தது. அந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் தற்போது நேரடியாக 2023 ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. அதனால் கொந்தளிக்கும் ரசிகர்கள் இவர் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடுவார் நாட்டுக்காக காயமடைந்து விடுவார் என்று வெளிப்படையாக விமர்சிக்கிறார்கள்.

MI Jaspirt Bumrah

ஏனெனில் 2019 – 2022 காலகட்டத்தில் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக 30% போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவர் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக 99% போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்நிலையில் காயத்தை கருத்தில் கொண்டு இந்தியாவுக்காக விளையாடாத பும்ரா ஐபிஎல் தொடரிலும் குறைந்தபட்சம் 7 போட்டிகளில் விளையாடக் கூடாது என்று விமர்சிக்கும் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா அதற்கு பிசிசிஐ வழி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக பும்ரா ஐபிஎல் தொடரில் விளையாடாமல் போனால் உலகம் அழிந்து விடாது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “நீங்கள் முதலில் இந்திய வீரர். அதன் பின்பு தான் ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்காக விளையாடும் வீரர். ஒருவேளை பும்ரா அசவுகரிமாக உணர்ந்தால் அவரை விளையாட அனுமதிக்க முடியாது என்று பிசிசிஐ தாமாக சென்று அவர் விளையாடும் ஐபிஎல் அணியிடம் தெரிவிக்க வேண்டும்”

Chopra

“குறிப்பாக ஜோப்ரா ஆர்ச்சருடன் இணைந்து ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக பும்ரா 7 போட்டிகளில் விளையாடாமல் போனால் உலகம் அழிந்து விடாது. அதே சமயம் நீங்கள் பிட்டாக இருக்கும் பட்சத்தில் களமிறங்கி தொடர்ந்து விளையாட வேண்டும். அது தான் உங்களை சிறந்தவராக மாற்றும். எனவே இதில் பிசிசிஐ தலையிடும் பட்சத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நிச்சயமாக அவர்களது பேச்சைக் கேட்கும் என்று நம்புகிறேன். ஏனெனில் பும்ரா இந்தியாவின் ஒரு பொக்கிஷம் போன்றவர். அத்துடன் தற்போது தோன்றும் நிலைமையை எளிதாக கையாள்வது அந்தளவுக்கு கடினமானது கிடையாது” என்று கூறினார்.

இதையும் படிங்க: IND vs AUS : வீணா முயற்சிக்காதிங்க உங்களால் எப்போதும் அஷ்வினாக முடியாது, ஆஸி வீரருக்கு இயன் சேப்பல் முக்கிய அட்வைஸ்

முன்னதாக ஏற்கனவே இந்தியாவுக்காக விளையாடாத பும்ரா ஐபிஎல் தொடரில் விளையாடினால் ஒரு கை பார்த்துக் கொள்ளலாம் என்று கபில் தேவ் போன்ற சில முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கோபத்தில் இருக்கின்றனர். எனவே இன்னும் ஒரு மாதத்தில் இதற்கான பதில் தாமாக தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement