IND vs AUS : வீணா முயற்சிக்காதிங்க உங்களால் எப்போதும் அஷ்வினாக முடியாது, ஆஸி வீரருக்கு இயன் சேப்பல் முக்கிய அட்வைஸ்

Ian Chappell Ashwin
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை வைத்துள்ளது. மேலும் 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தங்களது சொந்த மண்ணில் வரலாற்றில் முதல் முறையாக சந்தித்த தோல்விக்கு இம்முறை இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து 2004க்குப்பின் டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பையும் கோட்டை விட்டுள்ள ஆஸ்திரேலியா எஞ்சிய 2 போட்டிகளில் வென்றால் தான் குறைந்தபட்சம் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்க்க முடியும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

மறுபுறம் 2 – 0* (4) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ள இந்தியா 2017, 2018/19, 2020/21, 2023* ஆகிய அடுத்தடுத்த 4 பார்டர் – கவாஸ்கர் கோப்பைகளை வென்ற முதல் அணியாக சாதனை படைத்து ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது. முன்னதாக இத்தொடரில் ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணியினரும் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு குறி வைத்தார்கள் என்றே சொல்லலாம்.

வீணா முயற்சிக்காதிங்க:
குறிப்பாக தம்மை போலவே பந்து வீசும் மகேஷ் பிதியா என்னும் லோக்கல் ஸ்பின்னரை தேடிப் பிடித்து பயிற்சி எடுத்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் திட்டங்களை தவிடு பொடியாக்கிய அஸ்வின் இதுவரை 14 விக்கெட்டுகளை சாய்த்து எதிர்பார்க்கப்பட்டது போலவே சிம்ம சொப்பனமாக செயல்பட்டு வருகிறார். அதை விட பெரும்பாலும் சுழலுக்கு சாதகமற்ற ஆஸ்திரேலிய மைதானங்களில் விளையாடி 450+ விக்கெட்டுகளை எடுத்து ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்குப்பின் நிலையாக விளையாடி வரும் நேதன் லயன் அஷ்வினுக்கு நிகராக சாதனை படைத்தும் சுழலுக்கு சாதகமான இந்திய மைதானங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை அவர் பந்து வீசும் வீடியோக்களை பார்த்து கற்று வருவதாக இத்தொடருக்கு முன் தெரிவித்தார்.

Lyon

மேலும் அவரைப் போலவே பந்து வீச முயற்சிப்பதாகவும் தெரிவித்திருந்த அவர் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் மட்டுமே 5 விக்கெட்களை எடுத்து தாக்கத்தை ஏற்படுத்தினார். எஞ்சிய தருணங்களில் சுமாராகவே செயல்பட்டது ஆஸ்திரேலியாவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது. இந்நிலையில் அஷ்வின் போல பந்து வீச முயற்சிக்காமல் உங்களைப் போல் பந்து வீசுங்கள் என்று நேதன் லயனுக்கு முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயன் சேப்பல் ஆலோசனை கொடுத்துள்ளார்.

- Advertisement -

மேலும் 2வது போட்டியில் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி ஏற்படுத்திய அழுத்தத்தை பயன்படுத்தி ஜடேஜா 7 விக்கெட்டுகளை எடுத்ததாக பாராட்டும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஸ்பின்னர்கள் அடிக்கடி அஷ்வின் – ஜடேஜா ஆகியோரது நுணுக்கங்களை பயன்படுத்த முயற்சிக்கிறார்கள். அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரை பற்றி பேசும் போது இந்தியாவில் என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களுக்கு துல்லியமாக தெரிந்துள்ளது. எங்கே பந்து வீசினாலும் அஸ்வின் அற்புதமான பவுலர்”

Chappell

“கடந்த முறை அவர் ஆஸ்திரேலியாவில் பந்து வீசுவதை பார்த்தேன். அங்கேயும் அவர் அசத்தினார். அத்துடன் மிகவும் சாதுரியமான அவர் தமக்கு என்ன வேண்டும் என்பதற்கேற்றார் போல் பயிற்சிகளை செய்கிறார் இருப்பினும் ஜடேஜா பெரிய வித்தியாசங்களை செய்வதில்லை. ஆனால் அவர் தனது பவுலிங்கை முன்னேற்றுவதற்கான சில நுணுக்கங்களை கற்றுள்ளார். அந்த இருவரும் இணைந்து இந்தியாவில் எப்படி அசத்த முடியும் என்பதற்கு தேவையான நுணுக்கங்களை கொண்டுள்ளார்கள்”

இதையும் படிங்க:IND vs AUS : 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட ஒருநாள் அணி அறிவிப்பு – லிஸ்ட் இதோ

“இந்த போட்டியில் அஷ்வின் அபாரமாக பந்து வீசினார் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அவர் ஏற்படுத்திய அழுத்தத்தில் ஜடேஜா 7 விக்கெட்களை எடுத்தார். இது போல் நடப்பது சகஜமாகும். அந்த வகையில் அவர்கள் இந்தியாவில் செய்வதை செய்வதற்காக நீங்கள் (ஆஸ்திரேலியா) இங்கே வரவில்லை என்று நினைக்கிறேன். குறிப்பாக நேதன் லயன் அஸ்வின் கிடையாது. அவர் நேதன் லயன் போல பந்து வீச வேண்டும். இருப்பினும் அதை அவர் செய்ய முயற்சித்துள்ளார்” என்று கூறினார்.

Advertisement