- Advertisement -
ஐ.பி.எல்

ஒரே வாரத்தில் இப்படி ஒரு மாற்றமா? புள்ளிபட்டியலில் ஏற்பட்டுள்ள மாற்றம் பற்றி தெரியுமா? – விவரம் இதோ

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வெற்றிகரமான 3-வது வார்த்தை கடந்து மிகுந்த விறுவிறுப்புடன் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இந்த தொடரில் ஏப்ரல் 17-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 2 போட்டிகள் நடைபெற்ற நிலையில் மதியம் 3.30 மணிக்கு நடந்த 28-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் கேப்டன் மயங்க் அகர்வால் காயம் காரணமாக விலகியதால் அவருக்கு பதில் ஷிகர் தவான் கேப்டனாக செயல்பட்டார். நவிமும்பையில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய பஞ்சாபுக்கு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் ஷிகர் தவான் 8 (11) ரன்களில் நடையை கட்ட அவருடன் களமிறங்கி மற்றொரு தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் 14 (11) ரன்களில் அவுட்டானார்.

போதாக்குறைக்கு நட்சத்திர வீரர் ஜானி பேர்ஸ்டோ 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்ததால் 48/3 என ஆரம்பத்திலேயே பஞ்சாப் தடுமாறியது. அந்த நிலையில் களமிறங்கிய லியம் லிவிங்ஸ்டன் அதிரடியாக ரன்களை குவிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது மற்றொரு இளம் வீரர் ஜிதேஷ் சர்மா 11 (8) ரன்களில் அவுட்டானதால் மீண்டும் 61/4 என பஞ்சாப் திணறியது.

- Advertisement -

காப்பாற்றிய லிவிங்ஸ்டன்:
அந்த நேரத்தில் களமிறங்கிய தமிழக வீரர் ஷாருக்கானுடன் ஜோடி சேர்ந்த லியம் லிவிங்ஸ்டன் மீண்டும் அதிரடியாக ரன்களை குவிக்க முயற்ச்சித்தார். இருப்பினும் 1 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 26 (28) ரன்களில் ஷாருக்கான் அவுட்டாக மறுபுறம் தொடர்ந்து அதிரடி கலந்த போராட்ட பேட்டிங்கை வெளிப்படுத்தி லிவிங்ஸ்டன் வெறும் 33 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் உட்பட 60 ரன்கள் குவித்து பஞ்சாப்பை ஓரளவு காப்பாற்றி ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பஞ்சாப் வெறும் 151 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக உம்ரான் மாலிக் 4 விக்கெட்டுகளையும் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

அதை தொடர்ந்து 152 என்ற சுலபமான இலக்கை துரத்திய ஹைதராபாத் அணிக்கு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் கேன் வில்லியம்சன் 3 (9) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். இருப்பினும் அடுத்து வந்த ராகுல் திரிப்பாதி அதிரடியாக தனது பங்கிற்கு 22 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அவருடன் எதிர்ப்புறம் விளையாடிய மற்றொரு இளம் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 3 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உட்பட 31 (25) ரன்கள் எடுத்து அவுட்டானார்.

- Advertisement -

ஹைதெராபாத் வெற்றி:
அந்த நிலையில் 77/3 என இரு தரப்புக்கும் வெற்றி சமமாக இருந்த நிலையில் ஜோடி சேர்ந்த ஐடன் மார்க்ரம் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோர் இணைந்து தங்களது அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். கடைசி நேரத்தில் அதிரடியாக பேட்டிங் செய்த இந்த ஜோடியில் நிக்கோலஸ் பூரான் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 35* (30) ரன்கள் எடுக்க மறுபுறம் 27 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 27 பந்துகளில் 41* ரன்கள் விளாசிய ஐடன் மார்க்ரம் அபார பினிஷிங் கொடுத்தார். கடைசி வரை அவுட்டாகாத இந்த ஜோடி சிறப்பான பினிஷிங் கொடுத்ததால் 18.5 ஓவர்களிலேயே 152/3 ரன்களை எடுத்த ஹைதராபாத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த அபார வெற்றிக்கு 4 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய ஹைதெராபாத் இளம் வீரர் உம்ரான் மாலிக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். பஞ்சாப் சார்பில் ராகுல் சஹார் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை எடுத்தார். இப்போட்டியில் கேப்டன் மயங்க் அகர்வால் இல்லாத நிலையில் பேட்டிங்கில் சொதப்பிய பஞ்சாப் பந்துவீச்சிலும் சுமாராக செயல்பட்டதால் இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் 3-வது தோல்வியை பதிவு செய்து 7-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

- Advertisement -

ஒரே வாரத்தில் மேஜிக்:
மறுபுறம் பந்து வீச்சிலும் பேட்டிங்கிலும் பொறுப்புடன் கச்சிதமாக செயல்பட்ட ஐதராபாத் இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் 4-வது வெற்றியை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் பொன்னான 8 புள்ளிகளை பெற்று 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மார்ச் 26-ஆம் தேதி துவங்கிய இந்த வருட ஐபிஎல் தொடரின் முதல் வாரத்தில் படுமோசமாக செயல்பட்ட அந்த அணி முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து கடைசி இடத்தில் திண்டாடியது.

ஆனால் அதன்பின் அணிக்குள் என்ன மேஜிக் நிகழ்ந்ததோ தெரியவில்லை நடப்புச் சாம்பியன் சென்னைக்கு எதிரான 3-வது போட்டியில் கொதித்தெழுந்து அதன்பின் குஜராத், கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய அடுத்த 4 போட்டிகளில் சாட்டையை சுழற்றி அபாரமாக செயல்பட்டு அடுத்தடுத்த வெற்றிகளுடன் பிளே ஆஃப் சுற்றை தீர்மானிக்கும் டாப் 4 இடங்களுக்குள் கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் நுழைந்துள்ளது. இதை பார்க்கும் ரசிகர்கள் ஒரே வாரத்தில் இப்படி ஒரு மாற்றமா என்று வியந்து போய் மனதார ஹைதராபாத் அணியை பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க : ஐ.பி.எல் வரலாற்றில் முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளராக மாபெரும் சாதனையை நிகழ்த்திய – புவனேஷ்வர் குமார்

கடந்த வருடம் பங்கேற்ற 14 போட்டிகளில் 3 வெற்றிகளையும் 11 தோல்விகளையும் பெற்ற ஹைதராபாத் கடைசிவரை புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. ஆனால் இந்த முறை 6 போட்டியிலேயே 4 வெற்றிகளை பெற்று டாப் 4 இடங்களுக்குள் சென்றுள்ளது உண்மையாகவே பாராட்டத்தக்கது. குறிப்பாக இதை பார்க்கும் சென்னை மற்றும் மும்பை ரசிகர்கள் இது போன்ற ஒரு மேஜிக் தங்களது அணியில் நிகழாதா என்று ஏங்குகிறார்கள்.

- Advertisement -
Published by