ஐ.பி.எல் 2022 : வெளியேறும் ஹைதராபாத் நட்சத்திரம் – வருந்துவதற்கு பதிலாக ரசிகர்கள் மகிழ்ச்சி, காரணம் இதோ

PBKS vs SRH
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஆரம்பம் முதலே தொடர் வெற்றிகளால் 13 போட்டிகளில் 10 வெற்றிகளை குவித்த குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக அதிகாரபூர்வமாக பிளே-ஆப் சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது. அதேபோல் தொடர் தோல்விகளால் ஆரம்பம் முதலே பின்தங்கிய சென்னை மும்பையும் முதல் 2 அணிகளாக ஏற்கனவே அதிகாரபூர்வமாக வெளியேறிவிட்டன. எனவே எஞ்சிய 3 இடங்களை பிடிப்பதற்கு எஞ்சிய அணிகளிடம் கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில் அந்த இடங்களைப் பிடிக்க லக்னோ, ராஜஸ்தான், டெல்லி மற்றும் பெங்களூரு ஆகிய அணிகளுக்கு அதிக வாய்ப்புகள் காணப்படுகிறது.

PBKS vs SRH

- Advertisement -

இந்த தொடரில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடியது. ஆனாலும் அதன்பின் வரிசையாக 5 வெற்றிகளை சுவைத்த அந்த அணி நேரடியாக டாப் 4 இடத்திற்குள் நுழைந்து அசத்தியது.

திணறும் ஹைதெராபாத்:
ஆனால் அதன்பின் மீண்டும் 5 தொடர் தோல்விகளை சந்தித்ததால் பிரகாசமாக இருந்த அந்த அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு 90% பறிபோனது. அந்த நிலைமையில் நேற்று மும்பைக்கு எதிராக நடைபெற்ற முக்கியமான போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்ற அந்த அணி தனது கடைசி போட்டியில் பஞ்சாப்பை எதிர்கொள்கிறது. அதில் வெற்றி பெற்றாலும் கூட அந்த அணியால் பிளே-ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு 99% குறைவாகும்.

DC vs SRH Kane Williamson

இந்த முக்கியமான இக்கட்டான தருணத்தில் ஹைதராபாத் அணியை வழிநடத்தி வரும் கேப்டன் கேன் வில்லியம்சன் தனது 2-வது குழந்தை பிறப்புக்காக இன்று நியூசிலாந்துக்கு திரும்பியுள்ளார். இதுபற்றி அந்த அணி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த கடைசி நேரத்தில் கேப்டனான அவர் திடீரென்று தாயகம் திரும்பியது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ரசிகர்கள் மகிழ்ச்சி:
ஒருவேளை கடைசி போட்டியில் வென்றாலும் ஹைதராபாத் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது சாத்தியமற்றது என்று உணர்ந்த காரணத்தால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பொதுவாக இது போன்ற முக்கிய தருணத்தில் கேப்டன் விலகினால் பெரும்பாலான ரசிகர்கள் வருத்தப்படுவார்கள். ஆனால் அவர் நாடு திரும்பியதற்கு நிறைய ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதுடன் கடைசி போட்டியில் இது ஹைதராபாத்துக்கு மிகப்பெரிய பலம் என்று சமூக வலைதளங்களில் பேசுகின்றனர்.

ஏனெனில் இந்த வருடம் இதுவரை 13 போட்டிகளில் வெறும் 216 ரன்களை 19.64 என்ற மோசமான சராசரியில் 93.51 என்ற படுமோசமான ஸ்டிரைக் ரேட்டில் அவர் எடுத்துள்ளார். களமிறங்கிய பெரும்பாலான போட்டிகளில் பொறுமையாகவும் டெஸ்ட் இன்னிங்ஸ் போல அதிக பந்துகளை எதிர்கொண்டு குறைவான ரன்களை எடுத்த அவரின் ஆமை வேக பேட்டிங் ஹைதராபாத்தின் இந்த மோசமான தோல்விகளுக்கும் பரிதாப நிலைக்கும் முக்கிய காரணமாக அமைந்தது. அதிலும் இந்த வருட ஐபிஎல் தொடரில் ரகானே போன்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் 100க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் எடுத்தனர். ஆனால் அவர்தான் மிகவும் மோசமாக 100 க்கும் கீழே ஸ்டிரைக் ரேட் கொண்ட ஒரே பேட்ஸ்மேனாக பரிதாப சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

வைரம் வார்னர்:
அதன் காரணமாக எஞ்சிய போட்டிகளில் ஹைதராபாத் வெற்றி பெற வேண்டுமெனில் கேன் வில்லியம்சன் பெஞ்சில் அமர வைக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் வெளிப்படையாகவே பேசினார். இத்தனைக்கும் இவர் சிறப்பாக விளையாடுவார் என்று நம்பி தான் காலம் காலமாக ரன் மழை பொழிந்து பல வெற்றிகளை தேடிக் கொடுத்து 2016இல் கேப்டனாக சாம்பியன் பட்டத்தையும் வாங்கிக்கொடுத்த நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் வார்னரை 2021 ஒரு சீசனில் சுமாராக செயல்பட்டார் என்ற காரணத்திற்காக பாதியிலேயே கேப்டன் பதவியில் இருந்து நீக்கி பெஞ்சில் அமரவைத்து அவமானப்படுத்தி ஹைதராபாத் அணி நிர்வாகம் கழற்றி விட்டது.

அவ்வளவு பெரிய நம்பிக்கை வைத்து பொறுப்பை ஒப்படைத்த ஹைதராபாத் நிர்வாகத்திற்கு வில்லியம்சன் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்ளவில்லை என்பதே நிதர்சனம். இதனால் வார்னரையே நன்றி இல்லாமல் அசால்டாக கழற்றிவிட்ட ஹைதராபாத் அணி நிர்வாகம் அடுத்த வருடம் வில்லியம்சனுக்கு குட் பை கொடுத்தாலும் அதில் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட்டா இருந்தாலும் நான் வேகமா சதமடிச்சது இதுக்காக மட்டும் தான் – சேவாக் பகிர்ந்த ரகசியம்

மேலும் வில்லியம்சன் என்பவர் ஒரு தரமான பேட்ஸ்மேன் என்று ரசிகர்கள் அனைவரும் அறிவார்கள். குறிப்பாக சமீபத்தில் அவருக்கு எல்போ பகுதியில் ஏற்பட்ட காயத்தால் நாட்டுக்காக விளையாடாமல் இருந்தார். ஆனால் தற்போது காயத்திலிருந்து குணமடைந்தது ஐபிஎல் தொடரில் விளையாடிய அவரின் ஆட்டம் சோடை போவதற்கு அந்த காயமே ஒரு காரணமாக அமைந்துள்ளது என்றும் கூறலாம்.

Advertisement