டெஸ்ட் கிரிக்கெட்டா இருந்தாலும் நான் வேகமா சதமடிச்சது இதுக்காக மட்டும் தான் – சேவாக் பகிர்ந்த ரகசியம்

Sehwag
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான வீரேந்திர சேவாக் ஒருநாள் போட்டிகளை காட்டிலும், டெஸ்ட் போட்டியில் மிக மிகுந்த அதிரடியாக விளையாட கூடியவர். டெஸ்ட் கிரிக்கெட் என்றாலே பொதுவாக மந்தமாக செல்லும் என்பதன் காரணமாக அவ்வப்போது தொலைக்காட்சியை பார்ப்பவர்களும் உண்டு. ஆனால் அப்படிப்பட்ட ரசிகர்களையும் டெஸ்ட் போட்டிகளை தொடர்ச்சியாக பார்க்க வைத்ததற்கு முக்கிய காரணமாக சேவாக் இருந்தார். ஏனெனில் டெஸ்ட் போட்டிகளில் கூட பவுண்டரிகளை பறக்கவிடும் சேவாக்கின் அதிரடியை காண தனி ரசிகர் கூட்டம் இருந்தது என்று சொல்லலாம்.

Sehwag

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 2001ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 8586 ரன்களை அடித்துள்ளார். அதில் 32 அரை சதங்களும், இருபத்தி மூன்று சதங்களும் அடங்கும். அதுமட்டுமின்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருமுறை 300 ரன்களை அடித்த வீரராகவும், 278 பந்துகளில் வேகமாக முச்சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் சேவாக் வைத்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தான் இப்படி அதிவேகமாக பேட்டிங் செய்து விரைவாக குவித்தது ஏன் என்பது குறித்து அவர் மனம் திறந்த பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து சேவாக் கூறுகையில் : டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் விளையாட ஆரம்பிக்கும் போதே ரிஸ்க் எடுத்து வேகமாக ரன்களை குவிக்க வேண்டும் என்று முடிவு செய்துதான் விளையாடினேன்.

ஏனெனில் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின், டிராவிட், லட்சுமணன், சவுரவ் கங்குலி போன்ற சிறப்பான வீரர்கள் அப்போது விளையாடி வந்தனர். அவர்கள் அனைவரும் 150 முதல் 200 பந்துகளில் சதம் அடிப்பார்கள். ஆனால் அதே வேகத்தில் நான் சதம் அடித்தால் என்னை யாரும் நினைவில் கொள்ள மாட்டார்கள்.

- Advertisement -

இதன் காரணமாகவே நான் வேகமாக சதத்தை அடித்தால் மட்டும் தான் என்னை ஞாபகம் வைத்துக் கொள்வார்கள். எனவே எனக்கு என்று தனியான ஒரு அடையாளத்தை உருவாக்கவே நான் அவர்களை விட மிகவும் வேகமாக ரன்களை அடிக்கவேண்டும் என்று முடிவு செய்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடி காட்டினேன் என்று கூறியுள்ளார். அவர் சொன்னதுபோலவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்றளவும் வேகமாக விளையாடிய வீரர் யாரென்று அனைவரை கேட்டாலும் சேவாக் என்று விரைவாக பதில் வரும்.

இதையும் படிங்க : 16 வயது இளம் ரசிகருக்கு வாழ்த்து சொல்லி. ஆட்டோகிராப் போட்ட தல தோனி – எதற்கு தெரியுமா?

அந்த அளவிற்கு சேவாக் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அற்புதமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். கிட்டத்தட்ட 104 போட்டிகளிலும் அவர் 82 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடி உள்ளார். இந்த அளவு டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 போட்டிகளுக்கும் மேல் எந்த வீரரும் அதிரடியாக விளையாடியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement