16 வயது இளம் ரசிகருக்கு வாழ்த்து சொல்லி. ஆட்டோகிராப் போட்ட தல தோனி – எதற்கு தெரியுமா?

Fan
Advertisement

இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள மிகப்பெரிய தொடராக ஐபிஎல் தொடர் பார்க்கப்படுகிறது. பெரிய அளவில் பணப்புழக்கம் இருப்பது மட்டுமின்றி அரிய பல திறமையான வீரர்கள் இந்த ஐபிஎல் தொடரின் மூலம் உலகிற்கு தெரிய வருகிறார்கள். அதன் மூலம் பல திறமையான வீரர்கள் கண்டறியப்பட்டு சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலித்து வருகிறார்கள். அந்த வகையில் ஐபிஎல் தொடரில் எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்ற ஜாம்பவான் அணியாக சென்னை அணி பார்க்கப்படுகிறது.

CSK Ms DHoni

சென்னை அணிக்கு தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா மட்டுமின்றி, உலக அளவிலும் ரசிகர்கள் பலர் உள்ளனர். அதற்கு முக்கிய காரணமாக சென்னை அணியை தலைமை தாங்கி வழிநடத்தி வரும் தோனியை கூறலாம். ஏனெனில் சென்னை அணி IPL தொடரில் பங்கேற்ற முதல் சீசனில் இருந்து இதுவரை தொடர்ச்சியாக சென்னை அணிக்காக அவர் கேப்டன்சி செய்து வருகிறார்.

- Advertisement -

தோனியின் தலைமையில் இதுவரை நான்கு முறை கோப்பையை வென்ற சென்னை அணி இந்த ஆண்டுக்கான பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் இருந்து வெளியேறினாலும் சென்னை அணியின் மீது ரசிகர்களுக்கு உள்ள ஈடுபாடு சிறிதும் குறையவில்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு ரசிகர்கள் இன்னமும் சிஎஸ்கே அணிக்கு தங்களது ஆதரவை வழங்கி வருகின்றனர்.

cs

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 16 வயது ரசிகரான ஒரு இளைஞர் தோனிக்கு நெகிழ்ச்சியான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தின் தோனி மீதான தனது அபிமானத்தையும், இந்திய அணி உலக கோப்பையை வென்ற கேப்டன் தனது வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கத்தையும் அந்த ரசிகர் எழுத்துக்களாக தனது உணர்வுகளை வெளிப்படுத்தி இருந்தார்.

- Advertisement -

இந்தக் கடிதம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாக சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் இந்த கடிதம் சமூகவலைதளத்தில் அதிகளவு பகிரப்பட்டு வந்த வேளையில் இந்த கடிதத்தை பார்த்து தோனியும் தனது பாராட்டுகளை பதிலாக அளித்துள்ளார்.

இதையும் படிங்க : அவருக்கு காட்டுத்தனமா பந்தை எறியத்தான் தெரியும் – பாகிஸ்தான் பவுலர் குறித்து மனம்திறந்த சேவாக்

மேலும் அதில் அவர் குறிப்பிட்டதாவது : நன்றாக எழுதி உள்ளீர்கள். வாழ்த்துக்கள் என்று தோனி கையெழுத்தும் போட்டுள்ளார் இந்த கடிதம் குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement