மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இரண்டாவது அணியாக சன் ரைசர்ஸ் அணி நிகழ்த்திய – மாபெரும் சாதனை

SRH
- Advertisement -

இஷான் கிஷன் தலைமையில் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது தற்போது பேட் கம்மின்ஸ் தலைமையின் கீழ் வெற்றி நடைபோட்டு வருகிறது. அதிரடி வீரர்களை நிறைய வைத்திருக்கும் சன் ரைசர்ஸ் அணி தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பிரமாதமான வெற்றிகளை பெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியிலும் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சன் ரைசர்ஸ் அணி நிகழ்த்திய சாதனை :

அந்தவகையில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 243 ரன்களை குவித்தது. பின்னர் 244 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் சன் ரைசர்ஸ் அணி இந்த தொடரில் தங்களது 6 ஆவது வெற்றியை பதிவு செய்தது. இதுவரை இந்த தொடரில் 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள சன் ரைசர்ஸ் அணி 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதனால் அவர்களது பிளே ஆப் வாய்ப்பும் பிரகாசமாகியுள்ளது.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மாபெரும் சாதனை ஒன்றினையும் சன் ரைசர்ஸ் அணி நிகழ்த்தியுள்ளது. அந்த வகையில் அவர்கள் நிகழ்த்திய சாதனை யாதெனில் : மும்பை இந்தியன்ஸ் அணி 200+ ரன்களை குவித்து இதுவரை ஒருமுறை மட்டுமே ஐ.பி.எல் போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : இம்பேக்ட் பிளேயராக ஆட்டத்திற்குள் வந்த ஷர்துல் தாகூருக்கு கிடைத்த ஏமாற்றம் – விவரம் இதோ

அதுவும் கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணி அவர்களை 200+ ரன்களை சேசிங் செய்து வெற்றி பெற்றிருந்தது. இவ்வேளையில் நேற்றைய போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 200+ ரன்களை சேசிங் செய்து வென்ற இரண்டாவது அணியாக சன் ரைசர்ஸ் அணி சாதனை நிகழ்த்தியுள்ளது.

Advertisement