இம்பேக்ட் பிளேயராக ஆட்டத்திற்குள் வந்த ஷர்துல் தாகூருக்கு கிடைத்த ஏமாற்றம் – விவரம் இதோ

Shardul Thakur
- Advertisement -

சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 41-ஆவது லீக் போட்டியில் விளையாடியிருந்த மும்பை இந்தியன்ஸ் அணியானது 243 ரன்கள் அடித்தும் தோல்வியை சந்தித்திருந்தது. அந்தவகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்ட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 243 ரன்களை அடித்தது.

ஷர்துல் தாகூருக்கு ஏற்பட்ட ஏமாற்றம் :

பின்னர் 244 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 18.4 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அடைந்த தோல்வி மும்பை இந்தியன்ஸ் அணியின் 6 ஆவது தோல்வியாக பதிவாகியது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக இம்பேக்ட் வீரராக விளையாடிய ஷர்துல் தாகூருக்கு ஏற்பட்ட ஏமாற்றம் பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்தவகையில் நேற்றைய போட்டியின் போது மும்பை அணியில் இடம்பிடித்து விளையாடிய ராபின் மின்ஸ் இரண்டாவது இன்னிங்சின் போது பிளேயிங் லெவனில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அவருக்கு பதிலாக இம்பேக்ட் வீரராக ஷர்துல் தாகூர் களத்திற்கு வந்தார். ஆனால் அவருக்கு மும்பை அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா ஒரு ஓவர் கூட பந்துவீச வாய்ப்பு வழங்கவில்லை. வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் இம்பேக்ட் வீரராக வந்தும் அவருக்கு ஓவரை வழங்காமல் அவரை தவிர்த்து 6 வீரர்களுக்கு பந்துவீச கேப்டன் வாய்ப்பினை வழங்கினார்.

- Advertisement -

இதையும் படிங்க : 5 முறை சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நேர்ந்த சோகம்.. பிளே ஆப் வாய்ப்பு என்ன ஆகும்? – விவரம் இதோ

போட்டியின் முதல் பாதியில் பேட்டிங் செய்யாத அவர் இரண்டாம் பாதியில் களத்திற்கு வந்தும் பந்துவீச்சாளராக இருந்தும் அவர் பந்துவீசாமல் வெறும் பீல்டிங்கை மட்டும் செய்து மைதானத்தில் இருந்து வெளியேறியது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த போட்டியில் அவருக்கு பந்துவீச பாண்டியா வாய்ப்பளித்திருக்க வேண்டும் என்றும் பலரும் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement