5 முறை சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நேர்ந்த சோகம்.. பிளே ஆப் வாய்ப்பு என்ன ஆகும்? – விவரம் இதோ

MI
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது தொடர் தோல்விகளை பெற்று மோசமான நிலையை சந்தித்துள்ளது. என்ன தான் நட்சத்திர வீரர்கள் நிரம்பி இருந்தாலும் மும்பை அணி தடுமாறி வருவது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. நேற்று வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முக்கிய லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளே ஆப் வாய்ப்பு :

அந்த வகையில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 243 ரன்களை குவித்தது. மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக ரயான் ரிக்கல்டன் 123 ரன்களையும், வில் ஜேக்ஸ் 46 ரன்களையும் குவித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பின்னர் 244 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சன் ரைசர்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 76 ரன்களையும், ஹென்றிச் கிளாசன் 65 ரன்களையும் குவித்தனர்.

இந்த போட்டியில் அடைந்த தோல்வி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த தொடரில் 6 ஆவது தோல்வியாக பதிவாகியுள்ளது. இந்த தொடரில் இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 2 வெற்றிகளை மட்டுமே பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 9 ஆவது இடத்தினை பிடித்து பரிதாபநிலையில் உள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : காட்டுத்தனமா சுத்த நெனைக்கல.. என் மனசுல இருந்தது இதுமட்டும் தான்.. ஆட்டநாயகன் டோனவன் பெரேரா பேட்டி

ஐ.பி.எல் வரலாற்றில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த சில ஆண்டுகளாகவே கோப்பையை கைப்பற்ற முடியமால் தடுமாறி வரும் வேளையில் இந்த ஆண்டும் ஹார்டிக் பாண்டியாவின் தலைமையில் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த தொடரில் எஞ்சியுள்ள அனைத்து ஆட்டங்களில் வெற்றி பெற்றாலும் மும்பை அணியின் பிளே ஆப் வாய்ப்பு என்பது எட்டா கனியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement