523 ரன்ஸ்.. ஐபிஎல் வரலாறு காணாத சாதனை படைத்த போட்டியில்.. போராடிய மும்பையை வீழ்த்திய ஹைதெராபாத்

SRh vs MI 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 27ஆம் தேதி ஹைதராபாத் நகரில் 8வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத்துக்கு மயங் அகர்வால் ஆரம்பத்திலேயே 11 ரன்களில் அவுட்டானார்.

ஆனால் எதிர்ப்புறம் மும்பை பவுலர்களை புரட்டி எடுத்த ட்ராவிஸ் ஹெட் 18 பந்துகளில் 50 ரன்கள் தொட்டு ஹைதராபாத்துக்காக அதிவேகமாக அரை சதமடித்த வீரர் என்ற டேவிட் வார்னர் சாதனையை உடைத்தார். அந்த வகையில் 9 பவுண்டரி 3 சிக்சரை பறக்கவிட்ட அவர் 62 (24) ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுபுறம் சேர்ந்து விளையாடிய அபிஷேக் சர்மா 16 பந்துகளில் 50 ரன்கள் தொட்டு அவர் படைத்த சாதனையை அடுத்த அரை மணி நேரத்தில் உடைத்தார்.

- Advertisement -

மாஸ் போட்டி:
அந்த வகையில் வெளுத்து வாங்கிய அவர் 3 பவுண்டரி 7 சிக்சருடன் 63 (23) ரன்களில் அவுட்டானார். அவர்களைத் தொடர்ந்து வந்த ஹென்றிச் க்ளாஸென் அடித்து நொறுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 பவுண்டரி 7 சிக்சருடன் 80* (34) ரன்களும் ஐடன் மார்க்கம் 42* (28) ரன்களும் எடுத்தனர். அதனால் 20 ஓவரில் 277/3 ரன்கள் குவித்த ஹைதராபாத் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற மாபெரும் சாதனை படைத்தது.

அதைத் தொடர்ந்து 278 ரன்களை துரத்திய மும்பைக்கு முரட்டுத்தனமாக அடித்த துவக்க வீரர்கள் இசான் கிசான் 34 (13), ரோஹித் சர்மா 26 (12) ரன்களில் அவுட்டானார்கள். அப்போது வந்த திலக் வர்மாவுடன் சேர்ந்து அதிரடியாக விளையாடிய இளம் வீரர் நமன் திர் 3வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு 30 (14) ரன்கள் விளாசி அவுட்டானார். அதே போல எதிர்ப்புறம் தொடர்ந்து அசத்திய திலக் வர்மா சதமடித்து தம்மால் முடிந்தளவுக்கு போராடி 64 (34) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

அப்போது மும்பைக்கு கடைசி 5 ஓவரில் 93 ரன்கள் தேவைப்பட்டது. அந்த சமயத்தில் களமிறங்கிய கேப்டன் பாண்டியா தடுமாறி 24 (20) ரன்களில் அவுட்டானார். அதனால் கடைசியில் டிம் டேவிட் 42* (22) ரோமாரியா செபார்ட் 15* (6) ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் ரன்கள் மட்டுமே எடுத்த மும்பை போராடி தோல்வியை சந்தித்தது. ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் கம்மின்ஸ், ஜெய்தேவ் உனட்கட் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இதையும் படிங்க: 11 வருட வரலாறு.. பாண்டியாவின் மும்பையை அடித்து தூளாக்கிய ஹைதராபாத்.. ஆர்சிபி’யை முந்தி மாஸ் ஐபிஎல் சாதனை

அதனால் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹைதராபாத் முதல் வெற்றியை பெற்று அசத்தியது. மறுபுறம் என்ன தான் பேட்டிங்கில் போராடினாலும் பந்து வீச்சில் வள்ளலாக ரன்களை வாரி வழங்கிய மும்பை பாண்டியா தலைமையில் 2வது தோல்வியை பதிவு செய்தது. அதை விட இந்த போட்டியில் 2 அணிகளும் சேர்ந்து 523 ரன்கள் (277+246) ரன்கள் அடித்தன. இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் 500+ ரன்கள் அடிக்கப்பட்ட முதல் போட்டி என்ற மாபெரும் வரலாறு காணாத சாதனையை இப்போட்டி ரசிகர்களுக்கு விருந்து படைத்தது.

Advertisement