11 வருட வரலாறு.. பாண்டியாவின் மும்பையை அடித்து தூளாக்கிய ஹைதராபாத்.. ஆர்சிபி’யை முந்தி மாஸ் ஐபிஎல் சாதனை

SRH vs MI
- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஹைதெராபாத் நகரில் மார்ச் 27ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு 8வது லீக் போட்டி நடைபெற்றது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான அந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத்துக்கு டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி வேகமாக ரன்கள் சேர்த்தார்.

இருப்பினும் எதிர்ப்புறம் தடுமாறிய மற்றொரு துவக்க வீரர் மயன் அகர்வால் 11 ரன்களில் பாண்டியா வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அப்போது வந்த அபிஷேக் ஷர்மா அதிரடியாக விளையாடிய நிலையில் எதிர்ப்புறம் மும்பை பவுலர்களை சரவெடியாக எதிர்கொண்ட டிராவிஸ் ஹெட் 18 பந்துகளில் 50 ரன்கள் தொட்டார். அதன் வாயிலாக ஹைதராபாத் அணிக்காக அதிவேகமாக அரை சதமடித்த வீரர் என்று டேவிட் வார்னரின் சாதனை உடைத்த அவர் புதிய சாதனை படைத்தார்.

- Advertisement -

நொறுக்கிய ஹைதெராபாத்:
அந்த வகையில் தொடர்ந்து பட்டைய கிளப்பும் ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 9 பவுண்டரி 3 சிக்சருடன் 62 (24) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆனால் அவர் அவுட்டானதும் தனது பங்கிற்கு மும்பை பவுலர்களை இருமடங்கு அதிரடியாக எதிர்கொண்ட அபிஷேக் சர்மா வெறும் 16 பந்துகளில் 50 ரன்கள் தொட்டார்.

அதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக அதிவேகமாக அரை சதமடித்த வீரர் என்ற டிராவிஸ் ஹெட்டின் சாதனையை அவர் அடுத்த அரை மணி நேரத்திற்குள் முறியடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். தொடர்ந்து அட்டகாசமாக பேட்டிங் செய்த அவர் 3 பவுண்டரி 7 சிக்சருடன் 63 (23) ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து ஐடன் மார்க்ரம் ஹென்றிச் கிளாசின் ஆகிய தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஜோடி சேர்ந்தனர்.

- Advertisement -

இந்த ஜோடி 250க்கும் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியது மட்டுமே மும்பைக்கு ஆறுதலாகும். ஏனெனில் அந்தளவுக்கு மீண்டும் சுமாராக பந்து வீசிய மும்பை பவுலர்களை பந்தாடிய இந்த ஜோடியில் ஃபார்மில் இருக்கும் கிளாஸின் அரை சதமடித்து மிரட்டினார். அதே வேகத்தில் அசத்திய அவர் 4 பவுண்டரி 7 சிக்சருடன் 80* (34) ரன்களும் ஐடன் மார்க்கம் 42* (28) ரன்களும் அடித்தனர்.

இதையும் படிங்க: மும்பையை ஓடவிட்டு டிராவிஸ் ஹெட் படைத்த சாதனையை.. 10 நிமிடத்தில் துள்ளாக்கிய அபிஷேக் மாஸ் சாதனை

அதனால் 20 ஓவரில் 277/3 ரன்கள் குவித்த ஹைதராபாத் ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற மாபெரும் சாதனை படைத்தது. இதற்கு முன் 2013ஆம் ஆண்டு புனேவுக்கு எதிராக பெங்களூரு 263/5 ரன்கள் நினைத்ததை முந்தைய சாதனையாகும். ஆனால் அந்த 11 வருட வரலாற்றை மிஞ்சி இன்று பாண்டியா தலைமையிலான மும்பையை அடித்து நொறுக்கி துவம்சம் செய்த ஹைதராபாத் புதிய சரித்திரம் படைத்துள்ளது.

Advertisement