மும்பையை ஓடவிட்டு டிராவிஸ் ஹெட் படைத்த சாதனையை.. 10 நிமிடத்தில் துள்ளாக்கிய அபிஷேக் மாஸ் சாதனை

Head and Abishek
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 27ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற எட்டாவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. அதில் கடந்த போட்டியில் தோல்வியை சந்தித்த மும்பை வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் டாஸ் வென்ற முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அந்த அணிக்கு இளம் தென்னாப்பிரிக்க வீரர் மாபாக்கா அறிமுகமாக களமிறங்கினார்.

அதே போல ஹைதராபாத் அணியில் நடராஜன் மற்றும் மார்க்கோ யான்சன் ஆகியோருக்கு பதிலாக உனட்கட் மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த ஹைதராபாத் அணிக்கு மாகாபா வீசிய 2வது ஓவரில் பட்டையை கிளப்பிய டிராவிஸ் ஹெட் 6, 6, 4, 4 என அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்க விட்டு ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தினார்.

- Advertisement -

மாஸ் சாதனை:
இருப்பினும் எதிர்புறம் தடுமாறிய மயங் அகர்வால் 11 ரன்களில் கேப்டன் ஹர்திக் பாண்டியா வேகத்தில் ஆட்டமிழந்தார். ஆனால் இந்த பக்கம் தொடர்ந்து மும்பை பவுலர்களை பட்டாசாக எதிர்கொண்டு வெறித்தனமாக பேட்டிங் செய்த டிராவிஸ் ஹெட் 18 பந்துகளில் 50 ரன்கள் தொட்டார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஹைதராபாத் அணிக்காக அதிவேகமாக அரை சதம் அடித்த வீரர் என்ற டேவிட் வார்னரின் சாதனை உடைத்த அவர் புதிய வரலாறு படைத்தார்.

இதற்கு முன் கடந்த 2015ஆம் ஆண்டு சென்னைக்கு எதிராகவும் 2017ஆம் ஆண்டு கொல்கத்தாவுக்கு எதிராகவும் இரண்டு முறை டேவிட் வார்னர் தலா 20 பந்துகளில் ஹைதராபாத் அணிக்காக அரை சதம் அடித்ததே முந்தைய சாதனையாகும். அந்த வகையில் தொடர்ந்து பட்டாசாக விளையாடிய அவருடைய ஆட்டத்தால் 6 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் 81/1 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இதுவே ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் ஹைதராபாத் பதிவு செய்த அதிகபட்ச ஸ்கோராகும். அந்த வகையில் தொடர்ந்து அசத்திய டிராவிஸ் ஹெட் 9 பவுண்டரி 3 சிக்ஸருடன் 62 (24) ரன்களை 258.33 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அவுட்டானார். குறிப்பாக ஆஸ்திரேலியாவுகாக ரோகித் சர்மா தலைமையிலான இந்தியாவை 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஃபைனலில் அவர் பந்தாடியதை இந்திய ரசிகர்களால் மறக்க முடியாது.

இதையும் படிங்க: இப்படியே இன்னும் 3 – 4 மேட்ச் ஆடுனா.. 2024 டி20 உ.கோ சான்ஸ் கிடைச்சுரும்.. சிஎஸ்கே வீரருக்கு சேவாக் ஆதரவு

அந்த சூழலில் தற்போது ரோகித் சர்மா இடம் வகிக்கும் மும்பையை இப்போட்டியில் வெளுத்து வாங்கிய அவருடன் மறுபுறம் சேர்ந்து விளையாடிய இளம் இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா தன்னுடைய பங்கிற்கு மும்பை பவுலர்களை புரட்டி எடுத்து 16 பந்துகளில் 50 ரன்கள் விளாசி 63 (23) ரன்கள் குவித்து அவுட்டானார். அதனால் ஹைதராபாத் அணிக்காக அதிவேகமாக அரை சதமடித்த வீரர் என்ற ஹெட் சாதனையை அடுத்த 10 நிமிடத்தில் அவர் உடைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement