இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ரசிகர்கள் மத்தியில் ஆண்டுதோறும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருவதால் ஒவ்வொரு ஆண்டும் பிரமாதமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 17 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள ஐபிஎல் தொடரானது நடப்பு 2025-ஆம் ஆண்டில் 18 ஆவது சீசனில் கோலாகலமாக அடியெடுத்து வைக்க காத்திருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி மார்ச் 22-ஆம் தேதி துவங்கவுள்ளது.
ரசிகர்களுக்காக சன் ரைசர்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ள சலுகை :
இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது கடந்த ஆண்டு இறுதியில் சவுதி அரேபியாவில் நடைபெற்ற வேளையில் அந்த ஏலத்தில் கலந்து கொண்ட பத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் எடுத்தனர்.
இதன் காரணமாக பல்வேறு வீரர்களின் இடமாற்றம் நிகழ்ந்துள்ளதால் இந்த ஆண்டு கோப்பையை கைப்பற்றப்போகும் அணிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவும் என்று தெரிகிறது. மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த ஐபிஎல் தொடரில் எந்த அணி இறுதி வரை சென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகிறது என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள வேளையில் ஒவ்வொரு அணிகளை சேர்ந்த ரசிகர்களும் தங்களது அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த ஆண்டு இறுதிப் போட்டி வரை சென்று அசத்திய சன் ரைசர்ஸ் அணி இந்த ஆண்டும் சிறப்பான வீரர்களை தேர்வு செய்துள்ளது. பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியானது கடந்த ஆண்டு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வேளையில் இந்த ஆண்டு மேலும் சில வலிமையான வீரர்களை அணிக்குள் இணைத்து பலம் வாய்ந்த அணியாக மாற்றியுள்ளதால் இந்த ஆண்டும் அவர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்று தெரிகிறது.
இந்நிலையில் சன்ரைசர்ஸ் அணி தங்களது ஹோம் கிரவுண்டான ஹைதராபாத்தில் விளையாடும் போட்டிகளில் அதிகளவு ரசிகர்களை மைதானத்திற்கு வரவழைக்க ஒரு ஸ்பெஷல் சலுகையை வழங்கி உள்ளது. அந்த வகையில் இரண்டு டிக்கெட்டுகளை வாங்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு டீம் ஜெர்சி இலவசமாக வழங்கப்படும் என அந்த அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க : சாம்பியன்ஸ் கோப்பையை ஜெயிச்சாலும் இல்லனாலும் ரோஹித் சர்மாவுக்கு போடப்பட்டுள்ள எண்டு கார்டு – விவரம் இதோ
ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள ஹோம் கிரவுண்ட் போட்டிகளுக்கு மட்டும் இந்த ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை துவங்கியுள்ளதாகவும் அந்த அணி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



