- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சிலருக்கு பிடிக்கலன்னு விராட் கோலி அதை குறைச்சுட்டா.. கிங் பிளேயராக இருக்க மாட்டாரு.. ஸ்ரீசாந்த் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கையை நட்சத்திரம் விராட் கோலி 27000க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து 82 சதங்கள் அடித்துள்ளார். நவீன கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக செயல்பட்டு வரும் அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டனாக சாதனைப் படைத்துள்ள அவரது தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக தொடரை வென்று சாதனை படைத்தது.

2016 – 2021 வரை தொடர்ச்சியாக 5 வருடங்கள் அவரது தலைமையில் இந்தியா உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக எதிரணிகளை சொல்லி அடித்தது. மேலும் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராகவும் விராட் கோலி சாதனை படைத்துள்ளார். முன்னதாக விராட் கோலி களத்தில் எப்போதும் ஆக்ரோஷமாக செயல்படுவதற்கு பெயர் போனவராக அறியப்படுகிறார்.

- Advertisement -

பிடிக்கலன்னு குறைக்கக்கூடாது:

குறிப்பாக எதிரணிகள் ஸ்லெட்ஜிங் செய்தால் அதற்கு அசராமல் விராட் கோலி தரமான பதிலடிகளைக் கொடுப்பார். மேலும் சாதாரண விக்கெட் விழுந்தாலே அதை அவர் வெறித்தனமாக கொண்டாடுவார். இருப்பினும் விராட் கோலி விக்கெட் எடுத்த பவுலரை விட ஏன் தேவையின்றி இப்படி கத்தி கொண்டாடுகிறார்? என்பது ஒரு தரப்பினருடைய கருத்தாகும்.

அதனால் அவருடைய ஆக்ரோஷம் சிலருக்கு பிடிக்காததாகவே இருக்கிறது. இந்நிலையில் சிலருக்கு பிடிக்கவில்லை என்பதற்காக விராட் கோலி தனது ஆக்ரோசத்தைக் குறைத்துக் கொண்டால் அவர் கிங் பிளேயராக இருக்க மாட்டார் என்று ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். எனவே விராட் கோலி ஓய்வு பெறும் வரை களத்தில் தனது ஆக்ரோசத்தை குறைத்துக் கொள்ளக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

கிங் மாறக் கூடாது:

இது பற்றி சமீபத்திய பேட்டியில் தொகுப்பாளர் கேள்விக்கு அவர் பதிலளித்தது பின்வருமாறு. “விராட் கோலி எதையும் மாற்ற வேண்டிய அவசியமில்லை. சிலர் அவருடைய குணத்தை ஆக்ரோஷம் என்று அழைக்கிறார்கள். ஆனால் நான் அதை ஆர்வம் என்று அழைப்பேன். விராட் கோலி ஆக்ரோஷமானவரா? என்று கேட்டால் இல்லை”

இதையும் படிங்க: இந்தியா மட்டுமல்ல அவங்களையும் வீழ்த்தி.. 2025 மகளிர் உ.கோ வெல்வோம்.. இங்கிலாந்து கோச் பேட்டி

“அனேகமாக அவர் விளையாட்டின் மீது வெறித்தனம் கொண்டவர் என்று நினைக்கிறேன். இருப்பினும் விராட் அதிகப்படியான ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவதாக மக்கள் சொல்வார்கள். என்னைப் பொறுத்த வரை அவர் தன்னுடைய அந்த ஆக்ரோசத்தை குறைத்தால், அவரால் அதே பிளேயராக இருக்க முடியாது” என்று கூறினார். அடுத்ததாக விராட் கோலி ஒரு நாள் கிரிக்கெட்டிலும் ஐபிஎல் தொடரிலும் மட்டுமே விளையாடப் போவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -