தடையில் இருந்து மீண்ட ஸ்ரீசாந்த். ஐ.பி.எல் தொடரில் இந்த அணிக்காகவே விளையாடவே விருபுகிறேன் – விவரம் இதோ

Srisanth
- Advertisement -

இந்திய அணிக்காக 2006 ஆம் ஆண்டில் இருந்து 2011 ஆம் ஆண்டு வரை விளையாடியவர் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீசாந்த். இவர் வேகப்பந்து வீச்சாளர். இந்திய அணி உலக கோப்பையை வென்ற 2007 மற்றும் 2011ம் ஆண்டுகளில் அணியின் முக்கிய வீரராக இருந்தார். 2013 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடிய போது மேட்ச் பிக்சிங் செய்ததாக இவர் மீது புகார் அளிக்கப்பட்டு அதன் பின்னர் பிசிசிஐ இவருக்கு வாழ்நாள் தடை விதித்தது.

Srisanth

- Advertisement -

பின்னர் கடந்த 7 வருடங்களாக நீதிமன்றத்தை நாடி சட்டப் போராட்டம் நடத்தினார். அதன் பின்னர் அவரது கடந்த 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. இந்த ஏழு ஆண்டு தடை காலம் கடந்த 13 ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. இதனை தொடர்ந்து கடந்த நான்கு மாதங்களாக தொடர்ந்து பயிற்சி செய்து வந்தார் ஸ்ரீசாந்த். மேலும் கேரளா அணிக்கான ரஞ்சி கோப்பை கேரள வீரர்கள் பட்டியலிலும் இவர் இடம் பிடித்திருக்கிறார்.

இந்நிலையில் 2013 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விளையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீசாந்த். தற்போது இவருக்கு 37 வயதாகிறது. அவர் கூறுகையில்…

நான் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்து இருந்தேன். அது உண்மைதான் ஆனால் தற்போது நான் இளம் வீரராக இருப்பது போலவும் உணருகிறேன். ஏழு வருடத்திற்கு பிறகு விளையாட வந்தாலும் என்னால் மீண்டும் நன்றாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இதுகுறித்து கடிதம் அனுப்பி இருக்கிறேன்.

- Advertisement -

நியூசிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருக்கும் கிளப் அணிக்காக விளையாட கடிதம் அனுப்பி இருக்கிறேன். இது தொடர்பாக பல்வேறு கிரிக்கெட் வாரியங்கள் இடம் பேசி வருகிறேன். 2023 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே எனது நம்பிக்கை என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீசாந்த்.

Srisanth

மேலும் ஏற்கனவே அளித்த பேட்டி ஒன்றில் இந்தாண்டு செப்டம்பர் முதல் பாதியில் எனது தடைக்காலம் முடிவடைய உள்ளதால் நான் இந்தாண்டு ஐ.பி.எல் தொடரிலும் பங்கேற்க வாய்ப்புள்ளது. அப்படி வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட விரும்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement