சஞ்சு சாம்சனை வெச்சு ராஜஸ்தான் கப் ஜெயிக்க முடியாது.. அவரை கேப்டனாக போடுங்க.. ஸ்ரீசாந்த் அதிரடி

Sreesanth 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. அதில் தேவையான வீரர்களை வாங்கிக்கொண்டு 2008க்குப்பின் 16 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்லும் முனைப்புடன் ராஜஸ்தான் ராயல் களமிறங்குகிறது. சொல்லப்போனால் 2008க்குப்பின் பெரும்பாலான சீசன்களில் சுமாராக செயல்பட்ட ராஜஸ்தான் பிளே ஆஃப் செல்வதற்கே திண்டாட்டங்களை சந்தித்து வந்தது.

அந்த நிலையில் 2021ஆம் ஆண்டு புதிய கேப்டனாக பொறுப்பேற்ற சஞ்சு சாம்சன் 2022 சீசனில் சிறப்பாக வழி நடத்தி ராஜஸ்தானை 2008க்குப்பின் 15 வருடங்கள் கழித்து ஐபிஎல் தொடரின் ஃபைனலுக்கு அழைத்துச் சென்றார். இருப்பினும் அதில் குஜராத்திடம் தோல்வியை சந்தித்த ராஜஸ்தான் சாம்சன் தலைமையில் இதுவரை 45 போட்டிகளில் 22 வெற்றி 23 தோல்விகளை பதிவு செய்து ஓரளவு நன்றாகவே செயல்பட்டு வருகிறது.

- Advertisement -

கேப்டனை மாத்துங்க:
இந்நிலையில் வருடத்திற்கு ஒருமுறை வரும் நீல நிலவு போல எப்போதாவது மட்டுமே ரன்களை அடித்து சுமாராக செயல்படுவதை வழக்கமாக வைத்திருக்கும் சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை வெல்ல முடியாது என்று அவருடைய சொந்த மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளார். மேலும் 2022 ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்று 2022 டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்துக்கு வென்று கொடுத்த அனுபவமிகுந்த ஜோஸ் பட்லர் ராஜஸ்தானை வழி நடத்த தகுதியானவர் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“என்னைப் பொறுத்த வரை ராஜஸ்தான் அணியின் சிஸ்டத்தில் மாற்றம் தேவை. நான் ராஜஸ்தானுக்கு விளையாடிய போது அவர்களிடம் முழுமையான நிர்வாகம் இருந்தது. அப்போது கேப்டனாக இருந்த ராகுல் டிராவிட் தொலைநோக்கு பார்வையையும் நுணுக்கங்களையும் கொண்டிருந்தார். நான் விளையாடியதில் அவர் ஒரு சிறந்த கேப்டன்”

- Advertisement -

“ஆனால் தற்போதுள்ள சஞ்சு சாம்சன் முதலில் கேப்டன்ஷிப் பொறுப்பை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது பட்லரை கேப்டனாக நியமியுங்கள். அவரால் சாதிக்க முடியும் என்றாலும் ராஜஸ்தான் அணிக்கு தொடர்ச்சியாக அசத்தக்கூடிய ஒருவர் தேவை. குறிப்பாக ரோகித் சர்மா போல தொடர்ந்து ஆர்வத்துடன் வெற்றியை கொடுக்கக் கூடியவர் உங்களுக்கு கேப்டனாக இருக்க வேண்டும்”

இதையும் படிங்க: தெ.ஆ ஒருநாள் தொடரில் ரிங்கு சிங், சஞ்சு சம்சானுக்கு சான்ஸ் கிடைக்குமா? கேப்டன் ராகுல் நேரடி பதில்

“கேப்டனாக ஒருவர் உங்களுக்கு அனைத்து போட்டிகளையும் வென்று கொடுக்காவிட்டாலும் குறைந்தது 3 – 4 போட்டிகளுக்கு ஒருமுறை வெற்றிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும். ஐபிஎல் பெரிய தொடர். அதில் நீல நிலவு போல எப்போதாவது அசத்தக்கூடிய ஒருவரை நீங்கள் வெற்றிக்காக சார்ந்திருக்க முடியாது” என்று கூறினார். அவர் கூறுவது போல தொடர்ச்சியாக நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தாதது சஞ்சு சாம்சன் இந்திய அணியில் நிலையான வாய்ப்புகளை பெறுவதற்கு தடையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement