பல லட்சம் ரசிகர்கள் போய்ட்டாங்க.. பாண்டியாவுக்காக ரோஹித்தை கழற்றி விட்ட மும்பை பற்றி.. ஏபிடி கருத்து

AB De Villiers 3
- Advertisement -

ஐபிஎல் 2024 சீசன் முதல் ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா தங்களின் கேப்டனாக செயல்படுவார் என்று மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது நிறைய ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் ஆகிய ஜாம்பவான்கள் தலைமையில் கூட 2008 – 2012 வரை மும்பை அணியால் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியவில்லை.

ஆனால் 2013இல் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று கொடுத்த ரோஹித் சர்மா 2015, 2017, 2019, 2020 ஆகிய அடுத்த 7 வருடங்களில் மொத்தமாக 5 சாம்பியன் பட்டங்களை வென்று மும்பையை வெற்றிகரமான அணியாக சாதனை படைக்க வைத்தார். அதற்கிடையே 2013 சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் கோப்பையையும் வென்று கொடுத்த அவர் தற்போது இந்தியாவின் கேப்டனாகும் அளவுக்கு முன்னேறியுள்ளார்.

- Advertisement -

ஏபிடி கருத்து:
மேலும் 5 கோப்பைகளை வென்று கொடுத்ததால் சென்னைக்கு தோனியை போல மும்பையின் கேப்டனாக ரோஹித் சர்மா கடைசி வரை இருப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு தற்போது பாண்டியா கேப்டனாக செயல்படுவார் என்று மும்பை அறிவித்ததால் அந்த அணியை லட்சக்கணக்கான ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வதை நிறுத்தி எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மும்பை அணியால் வளர்க்கப்பட்ட பாண்டியா மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு ரசிகர்கள் இவ்வளவு தெரிவிப்பது ஆச்சரியத்தை கொடுப்பதாக ஏபி டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார். ரோகித் சிறந்தவர் என்றாலும் வருங்காலத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த முடிவு சரியானதே என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்த முடிவால் சிலர் மகிழ்ச்சியாகவும் சிலர் சோகமாகவும் இருக்கின்றனர். ரோகித் சர்மாவுக்கு பதிலாக பாண்டியா கேப்டனாக செயல்படுவார் என்ற அறிவிப்பால் மும்பை லட்சக்கணக்கான ரசிகர்களை இழந்ததாக நான் ஒரு செய்தியில் படித்தேன். இருப்பினும் இது மும்பையின் மோசமான முடிவு என்று நான் கருதவில்லை. மும்பைக்காக ரோகித் சிறந்த கேப்டனாக செயல்பட்டார். ஆனால் தற்போது ரோஹித் சர்மா அழுத்தங்கள் இல்லாமல் சுதந்திரமாக மகிழ்ச்சியுடன் விளையாடுவதற்கான நேரமாகும்.

இதையும் படிங்க: தெ.ஆ ஒருநாள் தொடரில் ரிங்கு சிங், சஞ்சு சம்சானுக்கு சான்ஸ் கிடைக்குமா? கேப்டன் ராகுல் நேரடி பதில்

“சிலர் சூரியகுமார் அல்லது பும்ரா போன்ற விஸ்வாசிகள் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால் ஐபிஎல் கேரியரை துவங்கியது முதல் பாண்டியா மும்பை பையனாக வளர்ந்தார். எனவே இந்த அறிவிப்புக்கு நிறைய எதிர்மறையான ரியாக்ஷன்கள் வருவது வேடிக்கையாக இருக்கிறது. ஒருவேளை மும்பைக்கு பாண்டியா கோப்பையை வென்று கொடுத்தால் ரசிகர்களுக்கு இந்த பிரச்சனை இருக்காது என்று என்னால் சொல்ல முடியும். இந்த முடிவு ரோகித் சர்மா தம்முடைய பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பை கொடுக்கும்” என்று கூறினார்.

Advertisement