முதல்ல நாட்டுப்பற்றை கத்துக்கோ.. அப்றம் இந்தியாவுக்கு விளையாடலாம்.. ரியான் பராக்கை விளாசிய ஸ்ரீசாந்த்

Sreesanth 2
- Advertisement -

ஐசிசி 2024 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் போட்டிகளின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. பொதுவாக ஜிம்பாப்வே கத்துக்குட்டியாக பார்க்கப்படுவதால் அத்தொடரில் சீனியர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படுவது வழக்கமாகும்.

அதே போல இம்முறையும் ஓய்வு பெற்ற விராட் கோலி, ரோஹித் சர்மாவை தாண்டி சூரியகுமார், ஹர்திக் பாண்டியா, பும்ரா போன்ற நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் சுப்மன் கில் தலைமையில் ஐபிஎல் 2024 தொடரில் அசத்திய இளம் வீரர்கள் ஜிம்பாப்வே தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளனர். குறிப்பாக ராஜஸ்தான் அணியில் இந்த வருடம் 531 ரன்கள் அடித்து அசத்திய ரியான் பராக் முதல் முறையாக இந்தியாவுக்கு தேர்வாகியுள்ளார்.

- Advertisement -

ஸ்ரீசாந்த் விளாசல்:
கடந்த 2019 – 2023 வரை ஐபிஎல் தொடரில் சுமாராக செயல்பட்டதால் கிண்டலடிக்கப்பட்ட அவர் இந்த வருடம் நன்றாக விளையாடி நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். முன்னதாக தமக்கு வாய்ப்பு கிடைக்காததால் 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி ஜெயித்தால் என்ன? தோற்றால் என்ன? என்று ரியான் பராக் தெரிவித்திருந்தார்.

அத்துடன் தமக்கு வாய்ப்பு கிடைக்கும் போது மட்டுமே அதைப்பற்றி கவலைப்படுவேன் என்றும் அவர் கூறியிருந்தார். மேலும் ஃபைனலில் மட்டும் எந்த அணி வெல்லப் போகிறது என்பதை செய்தியில் பார்த்து தெரிந்து கொள்வேன் என்றும் ரியான் பராக் தெரிவித்திருந்தார். அவருடைய இந்த கருத்து ஏற்கனவே இந்திய ரசிகர்களிடம் கடுமையான கோபத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக எதுவுமே சாதிக்காமல் இந்தியாவுக்காக விளையாடுவதற்கு முன்பாகவே இவ்வளவு திமிராக பேசலாமா? என்று அவரை ரசிகர்கள் விளாசினர்.

- Advertisement -

இந்நிலையில் ரியான் பராக் போன்ற இளம் வீரர்கள் முதலில் நாட்டுப்பற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 உலகக் கோப்பை வென்ற முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். இது ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “தமக்கு வாய்ப்பு கிடைக்காததால் இந்த உலகக் கோப்பையை பார்க்கப் போவதில்லை என்று சில இளம் வீரர்கள் தெரிவித்திருந்தனர்”

இதையும் படிங்க: இனிமேல் யாருக்கும் தைரியம் இருக்காது.. மனுஷன் வேற லெவல் கம்பேக் கொடுத்துட்டாரு.. ராயுடு பாராட்டு

“அவர்களுக்கு முதலில் நாட்டுப்பற்றை கற்றுக் கொள்ளுங்கள் என்று நான் சொல்வேன். அதன் பின்பே நீங்கள் கிரிக்கெட்டின் ரசிகனாக இருக்க வேண்டும். உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் நாட்டுக்காக தேர்வாகியுள்ள வீரர்களுக்காக நீங்கள் இதயத்திலிருந்து இந்தியா டி20 மற்றும் உலகக் கோப்பை வெல்ல வேண்டும் என்ற ஆதரவை கொடுக்க வேண்டும்” எனக் கூறினார்.

Advertisement