கேப்டனா இல்லாமயே எதிரணிகளை பந்தாடி.. ரோஹித் சர்மா அந்த சாதனை படைப்பாரு.. ஸ்ரீசாந்த் அதிரடி பேட்டி

Sreesanth
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் தங்களுடைய முதல் 3 போட்டிகளிலும் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது. அதனால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தவிக்கும் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதை விட ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு மும்பை ரசிகர்களே எதிர்ப்பு தெரிவிப்பது தற்சமயத்தில் பெரிய சர்ச்சையாக காணப்படுகிறது.

ஏனெனில் கேப்டனாக ரோகித் சர்மா 5 கோப்பைகளை வென்று கொடுத்து மும்பை வெற்றிகரமான அணியாக ஜொலிப்பதற்கு முக்கிய காரணமாக திகழ்கிறார். அதனால் இந்தியாவின் கேப்டனாகவும் இருக்கும் அவர் சர்வதேச அரங்கிலும் தற்சமயத்தில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். ஆனாலும் மும்பை நிர்வாகம் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து கழற்றி விட்ட அவரை முதல் போட்டியிலேயே பவுண்டரி எல்லைக்கு சென்று ஃபீல்டிங் செய்யுமாறு பாண்டியா வற்புறுத்தினார்.

- Advertisement -

ஸ்ரீசாந்த் அதிரடி கருத்து:
அதனால் கோபமடைந்த மும்பை ரசிகர்களே ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தோனி தலைமையில் சச்சின் விளையாடியது போல பாண்டியா தலைமையில் ரோஹித் விளையாடுவதில் எந்த தவறுமில்லை என ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். சொல்லப்போனால் இந்த முடிவால் ரோஹித் சர்மா கேப்டன்ஷிப் அழுத்தம் இல்லாமல் சுதந்திரமாக விளையாடுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே இம்முறை கேப்டனாக இல்லாமலேயே ரோஹித் சர்மா எதிரணிகளை அடித்து நொறுக்கி அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்து ஆரஞ்சு தொப்பியை வெல்வார் என்றும் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நாம் மஹி பாய் தலைமையில் கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் விளையாடுவதை பார்த்துள்ளோம். அவர்கள் ஒன்றாக சேர்ந்து உலகப் கோப்பையும் வென்றுள்ளார்கள்”

- Advertisement -

“இருப்பினும் பாண்டியா தலைமையில் ரோகித் சர்மா விளையாடுவது பற்றி நிறைய கதைகள் காணப்படுகின்றன. ஆனால் உண்மையாக தற்போது ரோஹித் சர்மா சுதந்திரமாக விளையாடுவதை விரும்புகிறார். எனக்குத் தெரிந்த வரை தற்போது ரோகித் சர்மா கேப்டன்ஷிப் பாரமில்லாமல் விளையாடி ஆரஞ்சு தொப்பியையும் வெல்வார். இந்த சீசன் அவருக்கு சிறப்பானதாக அமையும். இதுவரை அவர் மும்பையை முன்னின்று வழி நடத்தினார்”

இதையும் படிங்க: பதிரனா, ரஹ்மான் விலகல்.. 2022இல் மிரட்டிய வீரரை இறக்கும் ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் நிகழ்ந்த 2 மாற்றம்

“ஆனால் இம்முறை ரோகித் சர்மா மும்பை அணியை பின்னின்று வழி நடத்துவார் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். எனவே இந்த மாற்றத்திற்கு தயாராக இருந்து அதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று நான் சொல்வேன். கேப்டனாக இல்லாமல் போனாலும் ரோஹித் சர்மா அதே நபராக தான் இருப்பார். கடினமான நேரங்களை கடந்து வந்த சாம்பியன் வீரரான ரோஹித் இந்த சீசனில் பெரிய ரன்கள் அடிப்பார்” என்று கூறினார்.

Advertisement