பதிரனா, ரஹ்மான் விலகல்.. 2022இல் மிரட்டிய வீரரை இறக்கும் ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் நிகழ்ந்த 2 மாற்றம்

Ruturaj CSk
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் ஐந்தாம் தேதி ஹைதராபாத் நகரில் 18வது லீக் போட்டி துவங்கியது. அதில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. அதில் 3 போட்டிகளில் 2 தோல்விகளை பதிவு செய்துள்ள ஹைதராபாத் வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்புடன் களமிறங்கியது. அதே போல கடந்த போட்டியில் டெல்லியிடம் தோற்ற சென்னையும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியுள்ளது.

அந்த சூழ்நிலையில் துவங்கிய அப்போட்டியில் சொந்த மண்ணில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் பட் கமின்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். சென்னை அணியில் எதிர்பார்க்கப்பட்டது போலவே முஸ்தபிசுர் ரகுமான் நாடு திரும்பியதால் விளையாடவில்லை. போதாகுறைக்கு கடந்த போட்டியில் அட்டகாசமாக பந்து வீசிய மதிசா பதிரனா இப்போட்டியில் லேசான காயத்தால் விளையாட மாட்டார் என்று கேப்டன் ருதுராஜ் அறிவித்தார்.

- Advertisement -

சிஎஸ்கே அணி:
அவர்களுக்கு பதிலாக மொயின் அலி அணியில் சேர்க்கப்படுவதாக ருதுராஜ் அறிவித்தார். மேலும் முதன்மை ஸ்பின்னர் மஹீஸ் தீக்சனா அணியில் சேர்க்கப்படுவதாகவும் தெரிவித்த அவர் இப்போட்டியில் முகேஷ் சௌத்ரி விளையாடுவார் என்றும் அறிவித்தார். ஆனால் 2 வீரர்கள் மட்டுமே வெளியேறியதால் முகேஷ் சௌத்ரி இம்பேக்ட் வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2022 சீசனில் தீபக் சஹார் காயமடைந்து வெளியேறிய போது தோனி தலைமையிலான சென்னை அணியில் வாய்ப்பு பெற்ற முகேஷ் சௌத்ரி 13 போட்டிகளில் 16 விக்கெட்டுகள் எடுத்து அற்புதமாக செயல்பட்டார். குறிப்பாக இடது கை வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்ட அவர் ரோகித் சர்மா போன்ற நிறைய டாப் பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கினார். அதனால் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற அவர் கடந்த வருடம் காயத்தால் விளையாடவில்லை.

- Advertisement -

ஆனால் இம்முறை காயத்திலிருந்து குணமடைந்துள்ளதால் அவர் இம்பேக்ட் வீரராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல பேட்டிங்கில் அதிரடியாக விளையாடக்கூடிய ஆல் ரவுண்டரான மொயின் அலியும் கடந்த போட்டியில் விளையாடாத நிலையில் இம்முறை மீண்டும் தேர்வாகியுள்ளார். மற்ற படி கடந்த போட்டியில் விளையாடிய அனைத்து வீரர்களும் மீண்டும் இந்த போட்டியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: சஷாங் சிங்கிற்காக பஞ்சாப் டீம் செஞ்ச வேலையை பாத்தீங்களா.. கொதித்த வர்ணனையாளர்கள்.. விளாசும் ரசிகர்கள்

ஹைதராபாத் போட்டியில் களமிறங்கும் சென்னை அணியின் பிளேயிங் லெவன் இதோ: ருதுராஜ் கைக்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்தரா, அஜிங்க்ய ரகானே, மொயின் அலி, டேரில் மிட்சேல், சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கீப்பர்), தீபக் சஹார், துஷார் தேஷ்பாண்டே, மஹீஸ் திக்சனா (முகேஷ் சௌத்ரி)

Advertisement