ஒரு சாதாரண வீரரை தோனி கிட்ட குடுத்தாலும்.. என்ன நடக்கும் தெரியுமா? – ஸ்ரீசாந்த் கொடுத்த சூப்பர் ஸ்பீச்

Sreesanth
- Advertisement -

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22-ஆம் தேதியான இன்று 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. இந்த துவக்க ஆட்டமே இருபெரும் அணிகளுக்கு இடையே நடைபெற இருப்பதினால் இந்த தொடரானது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

அதோடு இந்த ஐபிஎல் தொடருடன் சென்னை அணியின் ஜாம்பவான் வீரர் தோனி ஓய்வு பெறுவார் என்கிற தகவல் பரவி வரும் வேளையில் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடரில் ஒரு முறையாவது தோனியை நேரில் காண வேண்டும் என்பதற்காக ரசிகர்களும் மைதானத்திற்கு படையெடுக்க காத்திருக்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் நேற்று தோனி தனது கேப்டன் பதவியை இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டிடம் வழங்கி சென்னை அணியில் சாதாரண வீரராக விளையாடப் போவதாக ஒரு முடிவை எடுத்தார். அதன் காரணமாக தோனி குறித்தும் அவரது கேப்டன்ஷிப் குறித்தும் பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியில் தோனியின் கீழ் சிறப்பாக செயல்பட்ட முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் தோனியின் கேப்டன்ஷிப் குறித்த சில நினைவலைகளை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் ஸ்ரீசாந்த் கூறியதாவது : ஒரு சாதாரண பவுலர் அல்லது ஒரு முதல்தர கிரிக்கெட் வீரருக்கு கைகளை சுழற்ற தெரிந்தாலே போதும் அவரை போட்டியை வெல்லும் வலிமை மிகுந்த வீரராக மாற்றும் திறன் தோனியிடம் உள்ளது.

- Advertisement -

எந்த ஒரு வீரரை கொடுத்தாலும் அவரை மிகச் சிறந்த வீரராக மாற்றிக் காட்டுவதில் தோனிக்கு நிகர் அவர் மட்டுமே. தோனியின் கேப்டன்சியின் கீழ் பல வீரர்களின் திறன் மாறியுள்ளது. அதற்கான பலன்களையும் நாம் கண்கூடாக பார்த்துள்ளோம் என்று ஸ்ரீசாந்த் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியது போன்றே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓரம் கட்டப்பட்ட பல வீரர்கள் சென்னை அணிக்கு வரும்போது மீண்டும் மிக சிறப்பான பார்முக்கு வந்துள்ளதையும் நாம் பார்த்துள்ளோம்.

இதையும் படிங்க : கண்டிப்பா அவர்கிட்ட பேசிட்டு தான் தோனி அந்த முடிவை எடுத்திருப்பாரரு – சி.எஸ்.கே கோச் பிளமிங் கருத்து

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கூட அஜின்க்யா ரஹானே டி20 கிரிக்கெட்க்கு செட்டாக மாட்டார் என்று பல்வேறு ஆணிகளால் நிராகரிக்கப்பட்ட வேளையில் அவரை 50 லட்சம் ரூபாய் என்கிற அடிப்படை விலைக்கு சென்னை அணிக்குள் கொண்டு வந்து தற்போது மிகச் சிறப்பான வீரராக தோனி மீண்டும் அவரை பார்முக்கு கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement